ஜடேஜாவுக்கு ஐசிசி செய்த அநீதி.. ஆயிண்மெண்ட் தடவிய விவகாரத்திற்கு தண்டனை.. கடும் கோபத்தில் பிசிசிஐ
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர் ஜடேஜா விரல் காயத்திற்கு ஆயிண்மெண்டை தடவிய விவகாரத்திற்கு தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் ஜடேஜாவின் சூழலை சந்திக்க முடியாத அந்நாட்டு வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். ஜடேஜாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத கையாளத்தனத்தை இது காட்டியது.
இந்த நிலையில் ஜடேஜா பந்தை சேதப்படுத்துவதற்கு ஏதோ, ஒரு கிரீமை தடவியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

விரலுக்கு மருந்து
ஆனால், இது கை விரலில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கும் மருந்து என்றும், அதனை அவர் பந்தில் தடவவில்லை என்றும் இந்தியா சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி நடுவர் ஆண்டி பாய்கிராப்ட், ஜடேஜாவையும், கேப்டன் ரோகித் சர்மாவையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

நடுவர் விசாரணை
இதில், ஜடேஜா தடவியது ஆயிண்மெண்ட் தான் என்றும், அதனால் பந்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் நடுவர் இறுதி முடிவை அறிவித்ததாக செய்திகள் வெளியானது. எனினும் சாண்ட் பேப்ரை வைத்து பந்தை சேதப்படுத்திய கும்பலுக்கு நடுவரின் விளக்கம் போதுமானதாக இல்லை. மேலும், ஜடேஜாவின் பந்துவீச்சால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

ஜடேஜாவுக்கு அபராதம்
இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்று இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தரைமட்டமாக்கிய சந்தோஷத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடுவர் ஆண்டி பாய்கிராப்ட் ஜடேஜாவுக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பிசிசிஐ என்ன செய்ய போகிறது?
அதன் படி, ஜடேஜா நடுவரின் அனுமதி இல்லாமல் மருந்து தடவியது குற்றம் என்றும், இதற்காக அவருக்கு ஒரு புள்ளிகள் குறைக்கப்பட்டு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்க போட்டி நடுவர் உத்தரவிட்டுள்ளார். இதனை கொஞ்சமும் இந்திய அணி எதிர்பார்க்காத நிலையில், பிசிசிஐ இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. வீரர்கள் காயமடைந்தால் நடுவர் அனுமிதி அளித்த பிறகு தான் மருத்துவ உதவி அளிக்கப்படுகிறதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications