Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் கைவிட்டுப் போகிறது டி20 உலகக்கோப்பை.. ஐசிசி-க்கு செய்தி அனுப்பியாச்சு.. பிசிசிஐ முடிவு

மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை விட்டு விலகி செல்வதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளதால் டி20 உலகக்கோப்பையை இங்கு நடத்தக்கூடாது என கோரிக்கைகள் வலுத்து வந்தன.

ஆனால் வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையுடன் பிசிசிஐ நம்பிக்கையுடன் உள்ளது.

கால அவகாசம்

கால அவகாசம்

அக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை நடக்கும் என்பதால் அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வழங்குமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஜுன் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் சரியான திட்டமிடலுடன் பிசிசிஐ வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம்

அமீரகம்

ஒருவேளை பிசிசிஐ-ஆல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்த சரியான திட்டமிட்டு கொடுக்க முடியாவிட்டால், அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும். அங்கு ஏற்கனவே ஐபிஎல் தொடர் செப் - அக்டோபர் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அது முடிந்தவுட கையுடன் உலகக்கோப்பை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிசிசிஐ தகவல்

பிசிசிஐ தகவல்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை அயல்நாட்டில் நடத்த பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி-ன் காலக்கெடு முடிவதற்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமாக இல்லாமல், பேச்சுவார்த்தை வாயிலாக, 20 உலகக்கோப்பையை எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆனால் இந்தியாவுக்கு தான் தொடரை நடத்தும் அதிகாரம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாடுகள்

2 நாடுகள்

டி20 உலகக்கோப்பையை நடத்த பிசிசிஐ-க்கு தற்போது 2 நாடுகள் தேர்வில் உள்ளன. முதல் தேர்வாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. அங்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் அதன் பிறகு பிட்ச்-ஐ தயார் செய்ய நவம்பர் ஆகிவிடும். இதனால் முதல் சில போட்டிகளை ஓமன் நாட்டில் நடத்தவும், மீத போட்டிகளை அமீரகத்தில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, June 5, 2021, 20:11 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+