Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாதத்தின் சிறப்பான வீரர்.. அங்கீகரிக்க புதிய விருதை அறிவிச்சிருக்கு ஐசிசி.. சிறப்பு... மிகச்சிறப்பு!

டெல்லி : சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஐசிசி புதிய விருதை அறிவித்துள்ளது.

மாதாந்திர அளவில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

இதன்படி ஐசிசியின் சிறப்பு குழுவினர் மாதந்தோறும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கவுள்ளனர். ரசிகர்களும் இதில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி புதிய விருது

ஐசிசி புதிய விருது

ஆண்டுதோறும் ஐசிசி சார்பில் சிறப்பான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வீரர்களை ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் மாதந்தோறும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான புதிய விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

2வது திங்கட்கிழமை அறிவிக்கும்

2வது திங்கட்கிழமை அறிவிக்கும்

இதன்படி மாதந்தோறும் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளை இதற்கென நியமிக்கப்படும் ஐசிசி குழுவினர் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அறிவிக்க உள்ளனர். இந்த குழுவில் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ஒளிப்பரப்பாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாக்களிக்க ஏற்பாடு

வாக்களிக்க ஏற்பாடு

இந்த வாக்களிப்பில் 10 சதவிகித ரசிகர்களும் சேர்க்கப்பட உள்ளனர். ரசிகர்கள் தங்களது வாக்கை ஐசிசி வலைதளத்தின்மூலம் பதிவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் இந்த விருது ஐசிசி வலைப்பக்கங்களில் வெளியிடப்பட உள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிராஜ், சுந்தர், நடராஜன் இடம்பிடிப்பு

சிராஜ், சுந்தர், நடராஜன் இடம்பிடிப்பு

இந்நிலையில் இந்த மாதத்திற்கான வீரர்கள் பரிந்துரையில் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ரிஷப் பந்த், குர்பாஸ், அஸ்வின், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல வீராங்கனைகள் பரிந்துரையில், மரிசானே காப், நடீன் டி க்ளெர்க், நிடா தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Wednesday, January 27, 2021, 14:41 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+