Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி பும்ரா எதுக்கு? ஐசிசி தரவரிசையில் புது உச்சம் தொட்ட முகமது சிராஜ்.. கோலியை முந்திய சுப்மன் கில்

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

இதேபோன்று இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார்கள்.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் ஒரு நாள் கிரிக்கெட்டின் முக்கிய நபராக மாறினார்.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

சர்வதேச அளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடாத அவர் தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். முகமது சிராஜ் கடைசியாக விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் .இதன் மூலம் 28 வயதான முகமது சிராஜ் ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்.

சரிந்த பும்ரா

சரிந்த பும்ரா

729 புள்ளிகளுடன் முதல் இடத்தில் சிராஜூம், இரண்டாவது இடத்தில் 727 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வீரர் ஜேஷ் ஹேசல்வுட்டும் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் 707 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முகமது சிராஜ் பிறகு குல்தீப் யாதவ்தான் இருபதாவது இடத்தில் தரவரிசையில் இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தற்போது 24 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

 ஷர்துல் முன்னேற்றம்

ஷர்துல் முன்னேற்றம்

இதேபோன்று முகமது சமி 32வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர் மூன்று இடங்கள் முன்னேறி 35 வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று சாகலும் மூன்று இடம் முன்னேறி 39 வது இடத்தில் இருக்கிறார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

கோலியை முந்திய கில்

கோலியை முந்திய கில்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் 360 ரன்கள் குவித்த இந்திய அணியின் சுப்மன் கில் தற்போது 20 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏழாவது இடத்திலும் தனது 30 வது சதத்தை விளாசிய ரோகித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இதேபோன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வே 13 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, January 25, 2023, 15:20 [IST]
Other articles published on Jan 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+