ஒரே சதம்.. ஒஹோனு வாழ்க்கை.. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் சுப்மான் கில் புதிய உச்சம்
துபாய் : சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி இளம் வீரர் சுப்மான் கில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
Recommended Video
கடைசியாக நடைபெற்ற. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் சதம் விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

இதன் மூலம் , ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இளம் வீரர் சுப்ம்மான் கில் 45 இடங்கள் முன்னேறி 38 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.
ஜிம்பாப்வே தொடரில் விளையாடாமல் ஓய்வில் இருந்த விராட் கோலி புதிய பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது இடத்திலும் , ரோகித் சர்மா தொடர்ந்து 6வது இடத்திலும் நீடிக்கிறார். இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடர்ந்து இரண்டு அரை சதம் அடித்தும் ஒரு இடம் சரிந்து பன்னிரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட காமெடியும் அரங்கேறி இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் 891 புள்ளிகளுடன் யாருமே தொட முடியாத இடத்தில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டுசன் 789 புள்ளிகள் உடன் இருக்கிறார். இவர் ஏணி வைத்தாலும் பாபர் அசாமை தொட முடியாது.
ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 3 ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, புள்ளிகள் அதிகரித்தாலும் 3வது இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் அணி 4வது இடத்தில் உள்ளது. இதனிடையே, டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோரை பிண்ணுக்கு தள்ளி தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார.


Click it and Unblock the Notifications