Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் அதிரடி எதிரொலி..மீண்டும் வரிசையில் டாப்க்கு சென்ற கிங்..சிராஜ்க்கு கிடைத்த கவுரவம்

துபாய் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 4 இன்னிங்ஸில் மூன்று சதம் விளாசி அசத்து இருக்கிறார்.

இதன் மூலம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் மீண்டும் டாப் இடத்திற்கு சென்றுள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் ஒரு நாள் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Latest odi Rankings - virat kohli moves in batting order

பாபர் அசாம் 887 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா வீரர் வேண்டர் டுசன் 766 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், குயின்டன் டி காக் 759 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 750 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்.

விராட் கோலி நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து அதிரடி காட்டினால் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் 10 இடங்களில் விராட் கோலியை தவிர ரோகித் சர்மா பத்தாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று பந்துவீச்சாளருக்கான பட்டியலில் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சிராஜை தவிர மற்ற இந்தியர்கள் யாரும் முதல் பத்து இடத்தில் இல்லை. இதேபோன்று டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 908 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்ம் பந்துவீச்சாளர்கள் பட்டியில் இந்திய அணி வீரர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. v

Story first published: Tuesday, January 17, 2023, 23:58 [IST]
Other articles published on Jan 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+