
168 இடங்கள்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் சுப்மன் கில் தரவரிசை பட்டியலில் உச்சத்தை தொட்டு இருக்கிறார். முதல் இரண்டு டி20 போட்டியில் சொத்தப்பிய கில், கடைசி ஆட்டத்தில் 63 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 23 வயதான சுப்மன் கில் தரவரிசை பட்டியலில் 168 இடங்கள் முன்னேறி தற்போது 30-வது இடத்தில் இருக்கிறார். கில் 6 சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிந்த நட்சத்திரங்கள்
தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய சுப்மன் கில் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்திலும் , டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 62வது இடத்திலும் நீடிக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட விராட் கோலி தற்போது 15ஆவது இடத்திலும், கே.எல் ராகுல் இரண்டு இடங்கள் சரிந்து தற்போது 27 ஏழாவது இடத்திலும் ,ரோகித் சர்மா 29 வது இடத்திலும் சரிந்து இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் டி20 உலக கோப்பைக்கு பிறகு எந்த டி20 போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் சரிவு
இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் கடந்த 16 இன்னிங்ஸில் ஆக சொதப்பி வரும் இசான் கிஷன் மூன்று இடங்கள் சரிந்து 48வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோன்று டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த ஒரு இந்திய வீரருவரும் இல்லை. ஹர்ஷிதீப் சிங் மட்டும் எட்டு இடங்கள் முன்னேறி தற்போது 13வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமார் தற்போது 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழக வீரர் அஸ்வின் 29 ஆவது இடத்திலும் ,அக்சர் பட்டேல் 30-வது இடத்திலும் உள்ளனர்.

ஹர்திக் முன்னேற்றம்
இந்திய அணியின் டி20 கேப்டனும் அதிரடி ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். கடைசி போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 16 ரன்கள் கொடுத்து பந்துவீச்சில் கலக்கிய ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவர் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 53வது இடத்தில் இருந்து 50-வது இடத்திற்கும் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 66-வது இடத்தில் இருந்து 46 ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

வெளிநாட்டு வீரர்கள்
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திலும் ஹர்திக் பாண்டியா பிடித்துள்ளார். இதேபோன்று நியூசிலாந்து வீரர் டாரல் மிச்சல் பேட்டிங்கில் 25வது இடத்தை பிடித்திருக்கிறார. ஒரு நாள் தரவரிசை பட்டியலில் ஜாஸ் பட்லர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 130 ரன்கள் அடித்ததன் மூலம் ஆறு இடங்கள் முன்னேறி தற்போது இருபதாவது இடத்தில் நீடிக்கிறார். இதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் லுங்கி கிடி ஐந்து இடங்கள் முன்னேறி பத்தொன்பதாவது இடத்திலும், ஜோப்ரா ஆர்சர் 13 இடங்கள் முன்னேறி 22-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications