Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை- பும்ரா, ஸ்ரேயாஸ் முன்னேற்றம்.. விராட் கோலி, ஜடேஜாவுக்கு சரிவு..

துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

ஆனால் சொதப்பிய வீரர்கள் பின்தங்கியுள்ளனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பும்ரா முன்னேற்றம்

பும்ரா முன்னேற்றம்

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா டெஸ்ட் தரவரிசையில் 10வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் என மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தியதால் பும்ரா இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

பேட்டிங் தரவரிசை

பேட்டிங் தரவரிசை

சமீபத்தில் கபில்தேவ், ஸ்டேயின் ஆகியோரின் சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் ரபாடா, 5வது இடத்தில் ஷாகின் ஷா ஆப்ரிடி ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மார்னஸ் லாபஸ்சேங் முதலிடத்திலும், ஜோ ரூட் 2வது இடத்திலும், ஸ்மித் 3வது இடத்திலும், வில்லியம்சன் 4வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலி சரிவு

விராட் கோலி சரிவு

பெங்களூரு டெஸ்டில் சதம் விளாசிய கருணரத்னே, 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்தில் உள்ளார். 5வது இடத்தில் இருந்த விராட் கோலி பெங்களூரு டெஸ்டில் சொதப்பியதால் 4 இடங்கள் சரிந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெங்களூரு டெஸ்டில் அதிவேக அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட் 10வது இடத்தில் நீடிக்கிறார்.

Recommended Video

Ind vs SL Kohli, Dravid congratulate Lakmal after he leaves field in his last match | Oneindia Tamil
ஸ்ரேயாஸ் பாய்ச்சல்

ஸ்ரேயாஸ் பாய்ச்சல்

இதே போன்று இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 40 இடங்கள் முன்னேறி தற்போது 37வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜடேஜா, 2வது இடத்தில் உள்ளார். ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக வீரர் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, March 17, 2022, 9:46 [IST]
Other articles published on Mar 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+