
ஜடேஜா முதலிடம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 175 ரன்கள் விளாசியும், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார். இதன் மூலம் 406 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருந்த ஜடேஜா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதே போன்று மற்றொரு வீரர் அஸ்வின், அரைசதம் அடித்த நிலையிலும் தற்போது 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னேற்றம்
இதே போன்று ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி டாப் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி அரைசதம் அடிக்கவில்லை என்றாலும், 7வது இடத்திலிருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதே போன்று ரிஷப் பண்ட் 96 ரன்கள் விளாசி முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார்.

அஸ்வின் 2வது இடம்
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா,ஒரு இடம் பின்தங்கி 6வது இடத்தை பிடித்துள்ளார். இதே போன்று டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், அஸ்வின் 2வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் பும்ரா 10வது இடத்தில் உள்ளார். முதல் டாப் 10 இடத்தில் இலங்கை வீரர்கள் யாரும் இல்லை.
Recommended Video

டெஸ்ட் அணி தரவரிசை
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 119 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 116 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3வத இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து 4வது இடத்திலும்,தென்னாப்பிரிக்கா 5வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications











