Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசிக்கு இங்கிலாந்தின் பரிந்துரை...டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு சிக்கல்..குழப்பத்தில் ரசிகர்கள்

இங்கிலாந்து: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியிருக்கும் நிலையில், அப்போட்டியில் பெரிய மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல் தொடர்

முதல் தொடர்

டெஸ்ட் போட்டியையும் பிரபலபடுத்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் 18 மாதத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து

இந்த தொடரில் நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன் ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியும் இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் புள்ளி 520 ஆகும். இந்த தொடரில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

இடமாற்றம்

இடமாற்றம்

அனைவரும் இந்தியா - நியூசிலாந்து மோதுவதை எதிர்நோக்கியுள்ள நிலையில், இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்போட்டிக்கான மைதானத்தை மாற்ற ஐசிசிக்கு வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், மற்றும் மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது

பழிதீர்க்குமா இந்தியா

பழிதீர்க்குமா இந்தியா

கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடனான மோதலில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது, இதனால் போட்டி எங்கு நடந்தாலும், பழைய தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Story first published: Monday, March 8, 2021, 0:29 [IST]
Other articles published on Mar 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+