For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசியின் "Protocols".. கோலி அணிக்கு.. இங்கிலாந்தில் "வேதனையான சோதனை" வெயிட்டிங்

மும்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய அணி கடைபிடிக்க வேண்டிய கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளை ஐசிசி பட்டியலிட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

 கடும் சவால்

கடும் சவால்

முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பலம் வாய்ந்த இரு அணிகள், கடினமான பிட்ச் என்று ஒரு பெரும் சவாலான தொடரை எதிர்நோக்கியுள்ளது கோலி டீம்

 கோவிட் நெறிமுறை

கோவிட் நெறிமுறை

இத்தொடருக்காக, ஜூன் மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்நிலையில், வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கோவிட்-19 நெறிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இன்று (மே.29) ஐசிசி இதுகுறித்த முழு அறிக்கையை தெளிவுப்படுத்தியுள்ளது.

 மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

இத்தொடருக்கான bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, 2021 ஜூன் 3 ஆம் தேதி ஒரு சார்ட்டர் விமானம் வழியாக இங்கிலாந்து வருகிறது. அப்போது, பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை வீரர்கள் கொண்டு வர வேண்டு

"இங்கிலாந்து வருவதற்கு முன்னர், இந்திய அணி மும்பையில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்தது. அப்போது வழக்கமான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்து வந்ததும் அவர்கள் நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் செல்வார்கள், அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 கடுமையான பயோ-பபுள்

கடுமையான பயோ-பபுள்

"இங்கிலாந்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது, வழக்கமான சோதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததென்றால், படிப்படியாக வீரர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். முதலில் சிறிய சிறிய குழுக்களாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிறகு குழுவின் அளவு அதிகரிக்கப்படும். எனினும், கடுமையான பயோ-பபுள் விதிமுறை பின்பற்றப்படும்" என்று ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, May 29, 2021, 18:22 [IST]
Other articles published on May 29, 2021
English summary
ICC Lists Covid-19 Protocols team india in england - ஐசிசி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X