Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? ஆஸி. குற்றச்சாட்டுக்கு நடுவர் என்ன சொன்னார் தெரியுமா ! வெளியான விவரம்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் ஆட்டம் இழந்ததுஇந்த நிலையில் நேற்று ஆட்டத்தின் போது ஜடேஜா கையில் ஏதோ தடவியதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் குற்றம் சாட்டியது.

இதனால்தான் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

விசாரணை

விசாரணை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அணி நிர்வாகம், ஜடேஜா கையில் வலி நிவாரணி ஆயின்மென்ட் களைத்தான் பயன்படுத்தியதாகவும் அவர் பந்தில் அதனை தடவவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போட்டியின் போட்டி நடுவர் பயோகிராப்ட் கேப்டன் ரோகித் சர்மாவிடமும் ஜடேஜாவிடமும் வீடியோ ஆதாரங்களை காட்டி விசாரணை நடத்திருக்கிறார்.

முடிவுக்கு வந்தது

முடிவுக்கு வந்தது

அப்போது இது வலி நிவாரணி ஆயின்மென்ட் தான் என்றும் விதிகளுக்கு மீறி தாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் ஜடேஜா விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் தாம் தடவிய ஆயின்மென்டையும் ஜடேஜா காண்பித்து இருக்கிறார். இதனை சோதித்துப் பார்த்த நடுவர் ஜடேஜா மீது தவறில்லை என்று கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஜடஜாவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் ஆஸ்திரேலியா வைத்த குற்றச்சாட்டும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பிராட் ஹாக் கருத்து

பிராட் ஹாக் கருத்து

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், ஜடேஜா ஆயின்மெண்ட் தடவியது உண்மைதான். ஆனால் அந்த ஆயின்மெண்டை பந்தில் தடவவில்லை என்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே இதை பெரும் பிரச்சனையாக்கும் அவசியமில்லை. இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்வது நல்லது என்று பதில் அளித்துள்ளார். எனினும் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய ஆஸ்திரேலியாவின் நிர்வாகம் மீது ஜடேஜா காட்டும் அதிருப்தியில் இருக்கிறார்.

 ஜடேஜா பதிலடி

ஜடேஜா பதிலடி

இதன் காரணமாகவே பேட்டிங்கில் இன்று ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நங்கூரம் போல் களத்தில் நிற்கிறார். தற்போது வரை ஜடேஜா 170 பந்துகளை எதிர் கொண்டு 66 ரன்களை அடித்திருக்கிறார்.இதனால் நாளை அவர் சதத்தை பூர்த்தி செய்தால் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி தரும் வகையில் ஏதேனும் சைகை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 10, 2023, 23:46 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+