
வர்த்தக லாபம்
உண்மையில் வர்த்தக ரீதியாக இந்தத் தொடரால் லாபம் கிடைப்பதைப் பார்த்துத்தான் அதை நிறுத்த மனம் வராமல் உள்ளதாம் ஐசிசி. இதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைக் கூட ரத்து செய்து விட்டது ஐசிசி.

2013ல் இந்தியா சாம்பியன்
2013 தொடரில் இந்தியாதான் சாம்பின் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அத்தோடு இந்தத் தொடர் முடிந்து விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது 2017 தொடரை நடத்தவுள்ளனர்.

புதிய தொடர் வருகிறது
இருப்பினும் 2017 தொடரோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு 2019 முதல் புதிய தொடரை அறிமுகப்படுத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறதாம். இதில் 13 நாடுகளின் அணிகள் இடம் பெறுமாம்.

குறுகிய காலத் தொடர்
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. 18 நாட்களுக்குள் இவை நடத்தப்படவுள்ளன என்பது குறிப்படத்தக்கது.


Click it and Unblock the Notifications