ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் IND vs AUS LIVE: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
சென்னை : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டி என்பதால் இந்தப் போட்டியில் வென்று உலகக்கோப்பையை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் இந்தியா இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியா கடந்த சில ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில், இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் அழுத்தமின்றி செயல்பட முடியும்.

ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் 72 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 75 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தல்
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 97 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. விராட் கோலி 31 ரன்களுடனும், கேஎல் ராகுல் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்சை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தவறவிட்டார்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது
இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினார்
49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்டாகியது
ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
பாட் கம்மின்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பாட் கம்மின்ஸ் 12, மிட்செல் ஸ்டார்க் 4 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் 11, கேமரான் கிரீன் 3 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
அலெக்ஸ் கேரி ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரே ஓவரில் ஜடேஜா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
மார்னஸ் லாபுஷேன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார். ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்களை இழந்தது.
ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 44, மார்னஸ் லாபுஷேன் 18 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
வார்னர் 41 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 31, டேவிட் வார்னர் 40 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 27, டேவிட் வார்னர் 24 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 16, டேவிட் வார்னர் 16 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 6, டேவிட் வார்னர் 5 ரன்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.
பும்ரா பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.
102 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா
இலங்கை அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இலங்கை அணி 30 ஓவர் முடிவில் 214 ரன்களுக்கு 5 விக்கெட்டு
இலங்கை அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றம்
குசல் மெண்டிஸ் 76 ரன்களிலும், சமரவிக்ரமா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
7 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. அதிரடியாக ஆடி வரும் குசால் மெண்டிஸ் 25 பந்துகளில் அரைசதம் விளாசி விளையாடி வருகிறார்
எய்டன் மார்கிரம் 49 பந்துகளில் சதம் அடித்தார். தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. இலங்கை அணிக்கு 429 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.
தென்னாப்பிரிக்கா 42 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. கிளாசன் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
டி காக் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டஸ்ஸன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 38 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.
30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. டஸ்ஸன் 96, டி காக் 92 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
21 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. டஸ்ஸன் 60, டி காக் 49 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. டஸ்ஸன் 33, டி காக் 22 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்
ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்தது. வங்கதேசம் பந்துவீச்சில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 37 ஓவர்களில் ஆப்கன் அணி 156 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழந்துள்ளது.
ரஷித் கான் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
33 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
நஜிபுல்லா ஸத்ரான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்தில் பவுல்டு அவுட் ஆகி வெளியேறினார். ஆஃப்கானிஸ்தான் இத்துடன் 5 விக்கெட்களை இழந்துள்ளது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிசூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 112 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.
20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழந்து 96 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 45, ஹஸ்மத்துல்லா ஹாஹிதி 4 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்
15 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 83 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகிறது
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்
நெதர்லாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 11 ஓவர்களில் 96 ரன்கள் தேவை.
36 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நட்சத்திர வீரர் வேன் டர் மெர்வ் 4 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்
பஸ் டி லீடே 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்களை இழந்தது நெதர்லாந்து.
6வது விக்கெட்டை இழந்தது நெதர்லாந்து அணி. சகிப் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 158 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.
30 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. பஸ் டி லீடே 61, சகிப் ஜுல்பிகர் 4 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
ஹாரிஸ் ரௌப் வீசிய 27வது ஓவரில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்களை இழந்தது. 27 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
22 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. விக்ரம்ஜித் சிங் 46, பஸ் டி லீடே 35 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
18 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. விக்ரம்ஜித் சிங் 34, பஸ் டி லீடே 25 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
14 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. விக்ரம்ஜித் சிங் 27, பஸ் டி லீடே 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
11 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. விக்ரம்ஜித் சிங் 24, கோலின் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
மாக்ஸ் ஓடோ 5 ரன்களில் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
நெதர்லாந்து அணி சேஸிங் செய்யத் துவங்கியது. விக்ரம்ஜித் சிங், மாக்ஸ் ஓடோ பேட்டிங் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்.
பாகிஸ்தான் அணி 245 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது.
சவுத் ஷக்கில் 68 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான்158 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது.
இமாம் உல் ஹக் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.
பாபர் அசாம் விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறிக் கொண்டு இருக்கிறது. பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 1, இமாம் உல் ஹக் 3 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர் பாக்கர் ஜமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் வான் பீக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சு


Click it and Unblock the Notifications