Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

சென்னை : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இருக்கிறது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

வங்கதேசம் இந்தப் போட்டியில் வெற்றியை பெற முயற்சிக்கும். அதனால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News,Match Highlight & Result in Tamil - myKhel Tamil

Oct 13, 2023, 9:42 pm IST

வங்கதேச அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய அதிரடி வீரர் மிட்செல் 89 ரன்களும் எடுத்து அசத்தினார்

Oct 13, 2023, 9:11 pm IST

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மிட்செல் 45 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார். 37 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 13, 2023, 8:37 pm IST

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்

Oct 13, 2023, 8:01 pm IST

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்

Oct 13, 2023, 7:34 pm IST

நியூசிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. கான்வே 30 ரன்களுடனும், வில்லியம்சன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Oct 13, 2023, 6:52 pm IST

நியூசிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 13, 2023, 5:47 pm IST

வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Oct 13, 2023, 4:50 pm IST

ஷகிப் அல் ஹசன் 40 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் 6 விக்கெட்களை இழந்து திணறல் ஆட்டம் ஆடி வருகிறது.

Oct 13, 2023, 4:10 pm IST

வங்கதேசம் 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் அல் ஹசன் 22, முஷ்பிகுர் ரஹீம் 47 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 13, 2023, 3:19 pm IST

வங்கதேச அணி 4 விக்கெட்களை இழந்தது. லாக்கி பெர்குசன் 2 விக்கெட், கிளென் பிலிப்ஸ் 1 விக்கெட், ட்ரென்ட் போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Oct 13, 2023, 3:05 pm IST

வங்கதேச அணியின் இளம் வீரர் ஷான்டோ 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Oct 13, 2023, 2:58 pm IST

வங்கதேசம் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 13, 2023, 2:41 pm IST

வங்கதேசம் 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. தன்சித் ஹசன் 16, மெஹிதி ஹசன் 21 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 13, 2023, 2:19 pm IST

வங்கதேசம் 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. தன்சித் ஹசன் 4, மெஹிதி ஹசன் 11 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Oct 13, 2023, 2:05 pm IST

ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் பந்தில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் டக் அவுட் ஆனார்.

Oct 13, 2023, 1:46 pm IST

வங்கதேசம் - நியூசிலாந்து இடையே ஆன போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Oct 12, 2023, 9:36 pm IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது

Oct 12, 2023, 9:14 pm IST

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த லபுஷேன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Oct 12, 2023, 9:08 pm IST

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது

Oct 12, 2023, 8:37 pm IST

28 ஓவர்கள் முடிவில் அச்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 12, 2023, 7:43 pm IST

கிளென் மேக்ஸ்வெல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

Oct 12, 2023, 7:36 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Oct 12, 2023, 7:09 pm IST

ஆஸ்திரேலிய அணியின் வார்னர் 13 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன் பேட்டிங் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழந்து 39 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Oct 12, 2023, 5:56 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்.

Oct 12, 2023, 5:15 pm IST

தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 12, 2023, 4:49 pm IST

டஸ்ஸன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். டி காக் சதம் அடித்து 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எய்டன் மார்கிரம், கிளாசன் பேட்டிங் ஆடி வருகின்றனர்.

Oct 12, 2023, 4:06 pm IST

டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா அணி 27 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 12, 2023, 3:08 pm IST

தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது

Oct 12, 2023, 2:31 pm IST

தென்னாப்பிரிக்க அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 12, 2023, 1:48 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Story first published: Thursday, October 12, 2023, 13:47 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+