Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி நிதான ஆட்டம்

சென்னை: உலகக்கோப்பை தொடரின் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlight & Results in Tamil

Oct 23, 2023, 6:54 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 5:47 pm IST

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்

Oct 23, 2023, 4:59 pm IST

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 23, 2023, 4:28 pm IST

பாகிஸ்தான் அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்

Oct 23, 2023, 3:43 pm IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் 58 ரன்கள் எடுத்து நூர் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 23 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஆனி 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது

Oct 22, 2023, 10:18 pm IST

இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Oct 22, 2023, 10:10 pm IST

விராட் கோலி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை.

Oct 22, 2023, 9:14 pm IST

ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்தியா 5 விக்கெட்களை இழந்தது.

Oct 22, 2023, 8:57 pm IST

32 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 92 ரன்கள் தேவை.

Oct 22, 2023, 8:43 pm IST

ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Oct 22, 2023, 7:57 pm IST

ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Oct 22, 2023, 7:54 pm IST

15.4 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்த நிலையில் பனிப்பொழிவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

Oct 22, 2023, 7:54 pm IST

ரோஹித் சர்மா 46, சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆடி வருகின்றனர்.

Oct 22, 2023, 7:43 pm IST

நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

Oct 22, 2023, 6:12 pm IST

நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களுக்கு ஆட்டமிழப்பு. முகமது ஷமி 5 விக்கெட்டு

Oct 20, 2023, 7:13 pm IST

பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. அப்துல்லா ஷபிக் 20, இமாம் உல் ஹக் 29 ரன்கள் சேர்த்து ஆடி வருகின்றனர்.

Oct 20, 2023, 7:00 pm IST

பாகிஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 20, 2023, 6:07 pm IST

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்களுக்கு எடுத்துள்ளது

Oct 20, 2023, 5:11 pm IST

42 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் 157 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Oct 20, 2023, 4:59 pm IST

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரையும் அடுத்தடுத்து பந்துகளில் வீழ்த்தி ஷாகின் அப்ரிடி அசத்தியுள்ளார்

Oct 20, 2023, 4:10 pm IST

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அடுத்தடுத்து பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளனர்

Oct 20, 2023, 4:06 pm IST

ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 208 ரன்கள் சேர்த்துள்ளது. வார்னர் 99 ரன்களுடனும், மார்ஷ் 96 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Oct 20, 2023, 3:20 pm IST

ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை விளாசியுள்ளது. வார்னர் 64 ரன்களுடனும், மார்ஷ் 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Oct 20, 2023, 2:50 pm IST

ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 20, 2023, 1:54 pm IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்

Oct 19, 2023, 8:40 pm IST

இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்

Oct 19, 2023, 8:26 pm IST

நட்சத்திர வீரர் விராட் கோலி 48 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இந்திய அணி 27 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 19, 2023, 8:02 pm IST

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Oct 19, 2023, 7:53 pm IST

இந்திய அணி தொடக்க வீரர் சுப்மன் கில் 52 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். தற்போது இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 19, 2023, 7:26 pm IST

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

Oct 19, 2023, 6:40 pm IST

இந்தியா சேஸிங் செய்யத் தொடங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கி ஆடி வருகின்றனர்.

Oct 19, 2023, 5:45 pm IST

வங்கதேசம் 7வது விக்கெட்டை இழந்தது. 46.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 3 ஓவர்களில் அதிக ரன் குவிக்க முயன்று வருகிறது வங்கதேசம்.

Oct 19, 2023, 4:22 pm IST

லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் 4 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் எடுத்து இருக்கிறது.

Oct 18, 2023, 9:07 pm IST

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

Oct 18, 2023, 9:05 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Oct 18, 2023, 8:32 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. 29 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 18, 2023, 7:57 pm IST

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Oct 18, 2023, 6:36 pm IST

ஆப்கானிஸ்தான் அணி 289 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பேட்டிங் ஆடத் துவங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Oct 18, 2023, 5:15 pm IST

200 ரன்களை தாண்டிய நியூசிலாந்து

Oct 18, 2023, 5:15 pm IST

நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது

Oct 18, 2023, 4:27 pm IST

நியூசிலாந்து அணி 142 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது

Oct 18, 2023, 3:51 pm IST

நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்தது

Oct 18, 2023, 3:51 pm IST

நியூசிலாந்து அணி தடுமாற்றம்

Oct 18, 2023, 3:28 pm IST

நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது

Oct 18, 2023, 2:35 pm IST

டெவான் கான்வே 20 ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, வில் யங் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

Oct 18, 2023, 2:09 pm IST

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் வில் யங், டெவான் கான்வே களமிறங்கி ஆடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் முதல் ஓவரை வீசினார்.

Oct 18, 2023, 2:06 pm IST

தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Oct 17, 2023, 11:04 pm IST

தென்னாப்பிரிக்க அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி

Oct 17, 2023, 9:45 pm IST

110 ரன்களுக்கு 6வது விக்கெட்டை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாற்றம்

Oct 17, 2023, 9:31 pm IST

தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது

Oct 17, 2023, 7:32 pm IST

மழை காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 17, 2023, 7:10 pm IST

நெதர்லாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 17, 2023, 6:28 pm IST

6 விக்கெட்களை இழந்து நெதர்லாந்து தடுமாறி வருகிறது. 28 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட் இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 17, 2023, 5:57 pm IST

நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணி 23 ஓவர்களில் 5 வ விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 16, 2023, 9:37 pm IST

இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Oct 16, 2023, 6:12 pm IST

இலங்கை அணி 43.3 வது ஓவரில் 209 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது

Oct 16, 2023, 3:47 pm IST

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நிசாங்கா 50 ரன்களும், குசல் பெரெரா 54 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

Oct 16, 2023, 3:24 pm IST

இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நிசாங்கா 42 ரன்களும், பெரெரா 36 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர்

Oct 16, 2023, 2:32 pm IST

இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 16, 2023, 1:49 pm IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Oct 15, 2023, 9:36 pm IST

ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Oct 15, 2023, 9:03 pm IST

இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து தோல்விக்கு அருகே உள்ளது. இலக்கை எட்ட இன்னும் 116 ரன்கள் தேவை.

Oct 15, 2023, 8:23 pm IST

இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி வெற்றிக்கு 144 பந்துகளில் 151 ரன்கள் எடுக்க வேண்டும்.

Oct 15, 2023, 7:29 pm IST

முகமது நபி பந்துவீச்சில் மலன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 15, 2023, 7:04 pm IST

இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 2 ரன்களிலும், ஜோ ரூட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து நிதான ஆட்டம் ஆடி வருகிறது.

Oct 15, 2023, 6:21 pm IST

இங்கிலாந்து அணி 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் துவங்கியது. ஜானி பேர்ஸ்டோ, டாவிட் மலன் துவக்கம் அளித்து ஆடி வருகின்றனர்.

Oct 15, 2023, 5:50 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது

Oct 15, 2023, 5:29 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 15, 2023, 4:50 pm IST

38.3 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 15, 2023, 3:53 pm IST

ரஹ்மத் ஷா 3 ரன்களிலும், குர்பாஸ் 80 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 15, 2023, 3:23 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜத்ரான் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 17 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது

Oct 15, 2023, 3:09 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 15, 2023, 2:55 pm IST

ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்

Oct 14, 2023, 7:44 pm IST

இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு 30 ரன்களே தேவை.

Oct 14, 2023, 7:37 pm IST

சுப்மன் கில் 16, விராட் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 6 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து 86 ரன் குவித்து வெளியேறினார்.

Oct 14, 2023, 5:27 pm IST

பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Oct 14, 2023, 5:12 pm IST

பாகிஸ்தான் அணி 40.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Oct 14, 2023, 4:45 pm IST

பாகிஸ்தான் அணியின் சாவுட் சகீல் 6 ரன்களிலும், இஃப்திகார் அஹ்மத் 4 ரன்களிலும், ரிஸ்வான் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 34 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 14, 2023, 4:18 pm IST

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 57 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். 29 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது

Oct 14, 2023, 3:40 pm IST

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. பாபர் அசாம் 10 ரன்களும், ரிஸ்வான் 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

Oct 14, 2023, 3:13 pm IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 36 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் சேர்த்துள்ளது

Oct 14, 2023, 2:47 pm IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் 20 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 14, 2023, 2:26 pm IST

5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Oct 14, 2023, 1:37 pm IST

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்

Oct 14, 2023, 12:11 pm IST

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண மைதானத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

Oct 14, 2023, 12:10 pm IST

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான லைவ் அப்டேட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்

Story first published: Saturday, October 14, 2023, 12:07 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+