டெல்லி : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இந்தப் போட்டியில் மோத உள்ளன.

வங்கதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. 41.1 ஓவரில் இலங்கை நிர்ணயித்த 280 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி வங்கதேசம் வெற்றி பெற்றது.
வங்கதேசம் 7 விக்கெட்களை இழந்தாலு, வெற்றியை நெருங்கியது.
ஷான்டோ 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக ஷகிப் அல் ஹசன் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் 4 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
வங்கதேச அணி 28 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷான்டோ 80 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 62 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.
வங்கதேச அணி 20 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷான்டோ 48 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 36 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்
வங்கதேச அணி 16 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷான்டோ 25 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 28 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்
இலங்கை அணி 37 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய களமிறங்காததால் இலங்கை அணியின் மேத்யூஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்
இளம் வீரர் சமரவிக்ரமா 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது
இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. கேப்டன் குசல் மெண்டிஸ் 19 ரன்களிலும், நிசாங்கா 41 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்
இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
குசால் பெரேரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
27.1 ஓவரில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்கா அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. மோசமான தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக்கா போராடி வருகிறது.
இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதம் அடித்து விராட் கோலி சச்சினின் சாதனையை சமன் செய்தார்
ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டமிழப்பு - இந்தியா 227 ரன்களுக்கு 3 விக்கெட்
இந்திய அணி 206 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.
24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியா 2 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்த்து அதிரடியாக விளையாடி வருகிறது
இந்தியா பேட்டிங் ஆடத் துவங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்தியா பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11 : க்வின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.