
மொத்தம் 16 அணிகள்
டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

போட்டிகள் விவரம்
குரூப் ஏ: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா
குரூப் பி: வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாப்புவா நியூ கினியா
இரண்டாவது சுற்று: ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் இந்த சுற்றில் பங்கேற்கும். மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த சுற்றுக்குப் பெயர் சூப்பர் 12. அக்டோபர் 30ஆம் தேதி துவங்கும் இரண்டாவது சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் விளையாடுகின்றன. அதன்பிறகு மூன்று பிளே ஆஃப் சுற்று, இரண்டு அரையிறுதி, ஒரு பைனல் நடைபெறும். இதற்கான அட்டவணை தான் தற்போது வெளியாகியுள்ளது.

குரூப் 1, குரூப் 2
குரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி குரூப் 2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பிறகு அக்டோபர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு துபாயில் நடக்கும் போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பிறகு, நவம்பர். 3ம் தேதி அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. நவம்பர். 5ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த அணியை எதிர்கொள்கிறது. பிறகு, நவம்பர் 8ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், 'ஏ' பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

குரூப் 1 போட்டிகள் விவரம்
- ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்க - 23 அக்டோபர், 14:00, அபுதாபி
- இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - 23 அக்டோபர், 18:00, துபாய்
- A1 vs B2 - 24 அக்டோபர், 14:00, ஷார்ஜா
- தென்னாப்பிரிக்க vs வெஸ்ட் இண்டீஸ் - 26 அக்டோபர், 14:00, துபாய்
- இங்கிலாந்து vs B2 - 27 அக்டோபர், 14:00, அபுதாபி
- ஆஸ்திரேலியா vs A1 - 28 அக்டோபர், 18:00, துபாய்
- வெஸ்ட் இண்டீஸ் vs B2 - 29 அக்டோபர், 14:00, ஷார்ஜா
- தென்னாப்பிரிக்க vs A1 - 30 அக்டோபர், 14:00, ஷார்ஜா
- ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - 30 அக்டோபர், 18:00, துபாய்
- இங்கிலாந்து vs A1 - 1 நவம்பர், 18:00, ஷார்ஜா
- தென்னாப்பிரிக்க vs B2 - 2 நவம்பர், 14:00, அபுதாபி
- ஆஸ்திரேலியா vs B2- 4 நவம்பர், 14:00, துபாய்
- வெஸ்ட் இண்டீஸ் vs A1 - 4 நவம்பர், 18:00, அபுதாபி
- ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - 6 நவம்பர், 14:00, அபுதாபி
- தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து - 6 நவம்பர், 18:00, ஷார்ஜா

குரூப் 2 போட்டிகள் விவரம்
- இந்தியா vs பாகிஸ்தான் - 24 அக்டோபர், 18:00, துபாய்
- ஆப்கானிஸ்தான் vs B1 - 25 அக்டோபர், 18:00, ஷார்ஜா
- நியூசிலாந்து vs பாகிஸ்தான் - 26 அக்டோபர், 18:00, ஷார்ஜா
- A2 vs B1 - 27 அக்டாபர், 18:00, அபுதாபி
- ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - 29 அக்டோபர், 18:00, துபாய்
- ஆப்கானிஸ்தான் vs A2 - 31 அக்டோபர், 14:00, அபுதாபி
- இந்தியா vs நியூசிலாந்து- 31 அக்டோபர், 18:00, துபாய்
- A2 vs பாகிஸ்தான் - 2 நவம்பர், 18:00, அபுதாபி
- B1 vs நியூசிலாந்து - 3 நவம்பர், 14:00, துபாய்
- இந்தியா vs ஆப்கானிஸ்தான் - 3 நவம்பர், 18:00, அபுதாபி
- நியூசிலாந்து vs A2 - 5 நவம்பர், 14:00, ஷார்ஜா
- இந்தியா vs B1 - 5 நவம்பர், 18:00, துபாய்
- நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - 7 நவம்பர், 14:00, அபுதாபி
- B1 vs பாகிஸ்தான் - 7 நவம்பர், 18:00, ஷார்ஜா
- இந்தியா vs A2 - 8 நவம்பர், 18:00, துபாய்

மெகா ஃபைனல்
முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அபுதாபியில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி நவம்பர் 11 அன்று துபாயில் நடத்தப்படும். இரண்டு அரையிறுதி ஆட்டங்களுக்கும் reserve நாட்கள் உள்ளன. இறுதிப் போட்டி துபாயில் உள்ளூர் நேரப்படி நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும். திங்கட்கிழமை இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக செயல்படும்.


Click it and Unblock the Notifications