
சூப்பர் லீக் தொடர்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எப்படி டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்கிறார்களோ , அதே போல் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற மூன்று ஆண்டுகளுக்கு தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 12 அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூரில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது.

எதற்காக நடத்தப்பட்டது
இதில் டாப் எட்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் லீக் தொடர் மூலம் கத்துக்குட்டி அணிகளான ஜிம்பாப்வே, அயர்லாந்து ,நெதர்லாந்து அணிகளுடன் பெரிய நாடுகள் மோதும். இதன் மூலம் அந்த நாடுகளில் கிரிக்கெட் பிரபலமாகும் என்ற நோக்கில் இந்த தொடர் அமைக்கப்பட்டது. இந்த சூப்பர் லீக் தொடர் அமல்படுத்திய பிறகு 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர் பெருமளவில் நடத்தப்படுவதில்லை.

பிசிசிஐ புகார்
இந்த நிலையில் சூப்பர் லீக் கிரிக்கட் தொடர் வந்த பிறகு ஒரு நாள் போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இரு நாடுகள் இணைந்து இருதரப்பு போட்டிகளை நடத்த சிக்கல் ஏற்பட்டதாகவும் , முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்த முடிவதில்லை என்றும் பிசிசிஐ உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் குற்றம் சாட்டினர்.

முத்தரப்பு தொடர்
இதனை அடுத்து வரும் மே மாதத்திற்குப் பிறகு சூப்பர் லீக் தொடரை நீக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதனை அடுத்து பழைய படியே இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளை இருதரப்பு தொடராக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்ற முத்தரப்பு தொடர்களை நடத்தவும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது . இதனால் பழையபடி பிரபல மூன்று அணிகள் இணைந்து அவர்களுக்குள் முத்தரப்பு போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்.

எந்த அணிகள் மோதுகிறது?
ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. ஆனால் ஐசிசி சூப்பர் லீக் தொடருக்கு பிறகு அது நடத்த முடியாமல் போனது. தற்போது ஐசிசி அனுமதி அளித்ததற்கு பிறகு பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது. இதே போன்று நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது .

டி20 போட்டிக்கு முக்கியத்துவம்
இதேபோன்று பாகிஸ்தான அணி இலங்கை மற்றும் வேறு ஒரு நாடுடன் முத்தரப்பு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதேபோன்று டி20 போட்டிகளில் முக்கியத்துவமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது வரை 15 , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்பது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications