Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்!

துபாய் : ஐசிசி வீராங்கனைகளுக்கான ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பௌலர்களுக்கான தரவரிசையில் 4 இந்திய வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 2 இடங்கள் கீழிறங்கி 6 இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் தரவரிசை

ஒருநாள் போட்டிகளின் தரவரிசை

ஐசிசி வீராங்கனைகளுக்கான ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெலளர்கள் 4 பேர் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜூலான் கோஸ்வாமி 5வது இடத்திலும் பூனம் யாதவ் 6வது இடத்திலும் ஷிகா பாண்டே 7வது இடத்திலும் தீப்தி ஷர்மா 10 இடத்திலும் உள்ளனர்.

2 இடங்கள் இறக்கம்

2 இடங்கள் இறக்கம்

ஆனால் பேட்ஸ்வுமன்கள் வரிசையில் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 732 புள்ளிகளுடன் 2 இடங்களில் கீழிறங்கி 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் மிதாலி ராஜ் 687 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நிலை பெற்றுள்ளார். இவர்கள் இருவர் மட்டுமே இந்த பட்டியலின் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனைகள்.

5 இடங்களில் முன்னேற்றம்

5 இடங்களில் முன்னேற்றம்

இங்கிலாந்து துவக்க வீராங்கனை டாமி பியோமான்ட் கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டின்மூலம் 5 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தீப்தி ஷர்மா 4வது இடம்

தீப்தி ஷர்மா 4வது இடம்

இதேபோல பௌலர்களுக்கான வரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸ் ஜோனாசன் 804 புள்ளிகளுடன் முதலிடத்தை தொடர்கிறார். அவரை மேகன் ஸ்சட் 735 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். இதனிடையே ஆல்-ரவுண்டர் வரிசையில் இந்தியாவின் தீப்தி ஷர்மா 4வது இடத்தில் 359 புள்ளிகளுடன் தொடர்கிறார்.

Story first published: Tuesday, March 2, 2021, 18:12 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+