Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவுக்கு 2 புள்ளிகள் குறைவு- 7வது இடத்துக்கு முன்னேறிய வ.தேசம்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளை இழந்த போதும் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. அதே நேரத்தில் வங்கதேசமே 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் 2-ல் வங்கதேசம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணி நேற்று மட்டும் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

ICC ODI Rankings: India drop 2 points; Bangladesh move to 7th

தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 117 புள்ளிகளில் இருந்து 115 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருக்கிறது.

88 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து வங்கதேசம் தற்போது 93 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தரவரிசைப் பட்டியல் விவரம்:

1. ஆஸ்திரேலியா (129 புள்ளிகள்)

2. இந்தியா (115 புள்ளிகள்)

3. நியூசிலாந்து (112 புள்ளிகள்)

4. தென்னாப்பிரிக்கா (112 புள்ளிகள்)

5. இலங்கை (106 புள்ளிகள்)

6. இங்கிலாந்து (98 புள்ளிகள்)

7. வங்கதேசம் (93 புள்ளிகள்)

8. மேற்கிந்திய தீவுகள் (88 புள்ளிகள்)

9. பாகிஸ்தான் (87 புள்ளிகள்)

10. அயர்லாந்து (50 புள்ளிகள்)

11. ஜிம்பாவே (44 புள்ளிகள்)

12. ஆப்கானிஸ்தான்(41 புள்ளிகள்)

Story first published: Thursday, June 25, 2015, 15:14 [IST]
Other articles published on Jun 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+