ICC Rankings - பாகிஸ்தானை முந்திய இந்தியா.. உலககோப்பைக்கு முன் No 1 அணியாக வர வாய்ப்பு
கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவிய அளவில் தற்போது தரவரிசை பட்டியலில் சரிவை கண்டுள்ளது.
பாகிஸ்தான் அணியில் நடப்பாண்டில் நியூசிலாந்து போன்ற அணிகள் எல்லாம் சொந்த மண்ணில் பலமான அணியாக விளங்கியது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நஷீம் சா, ஹாரிஸ் ரவுப், சாகின் அப்ரிடி ஆகிய மூவரும் எதிர் அணி வீரர்களுக்கு பயத்தை தரக்கூடிய அளவுக்கு இருந்தார்கள்.

இதனால் நம்பர் ஒன் அணியாக வலம் வரும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்தனர். ஆனால் அனைவரையும் ஏப்ரல் fool செய்தது. பாகிஸ்தான் மேலும் அந்த அணியின் முக்கிய பௌலர்கள் காயம் காரணமாக விலகியதும் பாகிஸ்தான் அணியின் பலத்தை வெகுவாக குறைத்தது.
இந்தியாவுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய பாகிஸ்தான் நேற்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் முதல் இடத்தில் தரவரிசையில் இருந்த பாகிஸ்தான் அணி தற்போது 115 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு சரிந்தது. ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்றுள்ள இந்திய அணி தற்போது 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி வங்கதேசம் மற்றும் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தினால் இந்தியா முதல் இடத்தை பிடித்து விடும்.
இதனை அடுத்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இருக்கிறது. அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் உலகக்கோப்பை தொடரில் நம்பர் ஒன் அணி என்ற பெருமையுடன் களம் இறங்குவார்கள். உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இத்தகைய அங்கீகாரம் கிடைத்தால் அது வீரர்களின் மனதில் பெரும் உத்வேகத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications