Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை- ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட சுப்மன் கில்.. இஷான் கிஷனும் முன்னேற்றம்

மும்பை : ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறார்கள்.

இதில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிக்கு எதிராக லீக் சுற்றில் இந்தியா விளையாடியது. இதில் நேபாள் அணிக்கு எதிராக கில் அபாரமாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

ICC odi Rankings - Shubman gill reaches top 3 as ishan kishan also rises in list

தற்போது அவர் 750 புள்ளிகளை அடைந்திருக்கிறார். அவருக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா வீரர் வேண்டர் டூசனுக்கும் 27 புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், நேபாளுக்கு எதிராக 151 ரன்கள் விளாசிய நிலையில் 882 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொரு நட்சத்திர வீரர் இசான் கிஷன் அபாரமாக விளையாடி 82 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவர் 12 இடங்கள் முன்னேறி 624 புள்ளிகள் உடன் 24 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 695 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 690 புள்ளிகளுடன் 11 வது இடத்திலும் உள்ளனர்.

முதல் 25 இடத்தில் நான்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதேபோன்று பந்துவீச்சிலும் இந்திய அணி வீரர்கள் முன்னேறி இருக்கிறார்கள். முகமது சிராஜ் எட்டாவது இடத்திலும் குல்திப் யாதவ் 12 வது இடத்திலும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா 35 வது இடத்தில் இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களில் ஹர்திக் பாண்டியா மட்டும் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Thursday, September 7, 2023, 6:09 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+