For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ODI சிறந்த வீரர்கள் அணி.. ஒரு இந்திய வீரருக்கு கூட இடமில்லை.. பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம்

துபாய்: 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் அடங்கிய ஒருநாள் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. மாறாக பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து உள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முக்கிய அணிகளை சேர்ந்த ஒரு வீரர் கூட இந்த சிறந்த ஒருநாள் வீரர்கள் அடங்கிய அணியில் இடம் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. இந்தியா உட்பட ஐந்து முக்கிய அணிகளும் 2024 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

ICC ODI team 2024 No Indian players named Pakistan Sri Lanka and Afghanistan players dominates

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்றதால் அதற்கு முன்பு அனைத்து அணிகளும் அதிக அளவில் டி20 போட்டிகள் - விளையாடின. ஆண்டின் பிற்பகுதியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மீதம் உள்ள போட்டிகளை ஆட வேண்டும் என்பதால் அனைத்து அணிகளும் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடின.

ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் - விளையாடின. இந்தியா மூன்று ஒரு நாள் போட்டிகள் - மட்டுமே விளையாடியது. இலங்கை அணிக்கு எதிரான அந்த தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே முழுமையாக நடைபெற்றன.

அந்த இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. அதன் காரணமாக இந்திய வீரர்கள் யாரும் இந்த சிறந்த ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் நான்கு இலங்கை வீரர்கள், மூன்று பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியலை பார்க்கலாம்.

2024 ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் அடங்கிய ஐசிசி ஒருநாள் அணி வீரர்கள் பட்டியல் -

சயிம் அயூப் (பாகிஸ்தான்) - 9 போட்டிகள் - 513 ரன்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 11 போட்டிகள் - 531 ரன்கள்
பதும் நிசங்கா (இலங்கை) - 12 போட்டிகள் - 694 ரன்கள்
குசல் மெண்டிஸ் (இலங்கை) - 17 போட்டிகள் - 742 ரன்கள்
சரித் அசலங்கா (இலங்கை) - 16 போட்டிகள் - 605 ரன்கள்
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 9 போட்டிகள் - 425 ரன்கள்
அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்) - 12 போட்டிகள் - 417 ரன்கள் & 17 விக்கெட்டுகள்
வனிந்து ஹசரங்கா (இலங்கை) - 10 போட்டிகள் - 26 விக்கெட்டுகள்
ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 6 போட்டிகள் - 15 விக்கெட்டுகள்
ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்) - 8 போட்டிகள் - 13 விக்கெட்டுகள்
அல்லா கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) - 11 போட்டிகள் - 21 விக்கெட்டுகள்

Story first published: Friday, January 24, 2025, 15:55 [IST]
Other articles published on Jan 24, 2025
English summary
ICC ODI team 2024: No Indian players named; Pakistan, Sri Lanka and Afghanistan players dominates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+