லக்னோ : 2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன் நீக்கப்பட்டு, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் கோட்ஸி நீக்கப்பட்டு ஷம்சி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. அங்குள்ள ஆடுகளத்தின் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பவுண்டரி எல்லை ஸ்கொயர் திசையில் 63 மீட்டர் மற்றும் 70 மீட்டர் உள்ளது. நேர் திசையில் 73 மீட்டர் உள்ளது. அதனால் பவுண்டரி அடிப்பதும் கடினம் தான். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் அதிக ரன்கள் குவிக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆடி இருந்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 428 ரன்கள் குவித்து இருந்தது. அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து இருந்தனர்.
மறுபுறம், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இந்தப் போட்டியில் ஆட உள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அதனால், ஆஸ்திரேலிய அணி தன் பேட்டிங் குறித்து கவலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முந்தைய போட்டியில் அதிக ரன் குவித்ததால் ஆஸ்திரேலியா பயத்துடனே இந்த போட்டியை எதிர் கொள்ளும்.
மேலும், உலகக்கோப்பை தொடருக்கு முன் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா 3 - 2 என்ற அளவில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் : க்வின்டன் டி காக் (கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசல்வுட்