இது தான் லக்கி உலக கோப்பை.. ராகுல் முதல் மேக்ஸ்வெல் வரை படைத்த ஒரே மாதிரியான சாதனை
மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் தற்போது எல்லாம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்படும் ஸ்கோர்கள் எல்லாம் 350 ரன்களுக்கு மேல் சர்வ சாதாரணமாக எடுக்கப்படுகிறது. இதனால் இந்த உலகக் கோப்பையில் பல பேட்ஸ்மன்களுக்கு அதிர்ஷ்டம் ஆக அமைந்திருக்கிறது.

பார்ம் இல்லாமல் தவித்த வீரர்கள் எல்லாம் இந்த உலகக்கோப்பை தொடரில் சர்வ சாதாரணமாக அடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பெரும்பான்மையான நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே மாதிரியான ஒரு சாதனையை படைத்திருக்கிறார்கள். அது என்ன என்று தற்போது பார்க்கலாம். நடப்பு உலகக்கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக தங்களது நாட்டுக்குள்ளே அதிவேகம் சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை ஐந்து நாட்டு வீரர்கள் பெற்று இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பை தொடரில் 63 பந்துகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருந்த நிலையில் தற்போது அதனை அதே உலக கோப்பையில் கே எல் ராகுல் முறியடித்திருக்கிறார். இதேபோன்று உலககோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் படைத்திருக்கிறார்.
இதேபோன்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் எய்டன் மார்க்கரம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதேபோன்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் மெண்டீஸ் இலங்கை அணிக்காக உலககோப்பை வரலாற்றில் அதிவேகம் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் பக்கர் சமான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இப்படி ஐந்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் தங்கள் நாட்டுக்காக ஒரே மாதிரியான ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications