For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை 2023 - 7 மறக்க முடியாத சர்ச்சைகளும், ஏமாற்றங்ளும்.. பட்டியல் இதோ

மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் லீக் சுற்று முடிவில் ரசிகர்கள் மறக்க முடியாத 7 ஏமாற்றங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது, ஷகிபுல் ஹசன் மேத்யூஸ்க்கு டைம் அவுட் கேட்டது தான். மேத்யூஸ் களத்துக்கு வர தாமதமானதாக கூறி சகிப்புல் ஹசன் இந்த விதியை பயன்படுத்தி அவுட் கேட்டார்.

ICC ODI World cup 2023 - 7 Biggest controversial and low points in the tournament

ஆனால் மேத்யூஸ் தன்னுடைய ஹெல்மெட் உடைந்து விட்டதால் வேறு ஹெல்மெட் மாற்றலாம் என்று சென்றதாக புகார் கூறினார். இந்த தொடரில் மிகப்பெரிய ஏமாற்றமாக பார்க்கப்பட்டது நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் அணியாக வெளியேறியதுதான். இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நினைத்த இங்கிலாந்து அணி விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டும் தான் வென்று இருக்கிறது.

இந்தத் தொடரில் சர்ச்சை ஏற்படுத்தியது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க காத்துக்கொண்டிருந்த நிலையில் வங்கதேச வீரர் வைட் வீசினார். ஆனால் நடுவர் அதற்கு வைட் தரவில்லை காரணம் விராட் கோலி சதத்தை நெருங்குவதால் அதனை தடுக்கும் வகையில் வங்கதேச வீரர் செயல்பட்டதாக கூறி அந்த வைடை நடுவர் தர மறுத்து விட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோன்று இந்த உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது நியூசிலாந்து அணி 401 ரன்கள் அடித்தும் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது தான். நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்து அதன் பின் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே நின்று டிஆர்எஸ் விதிப்படி பாகிஸ்தான் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று இந்த தொடரில் டிஆர்எஸ் விதி பயன்படுத்தப்பட்டது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

டி ஆர் எஸ் சரியாக இயங்கினாலும் இது இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி இலங்கை மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோன்று இந்த உலகக் கோப்பையில் மறக்க முடியாத சர்ச்சையாக பார்க்கப்படுவது பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு சாதகமாக ஸ்பெஷல் பந்தை ஐசிசி வழங்குவதன் மூலம் தான் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Story first published: Saturday, November 11, 2023, 12:38 [IST]
Other articles published on Nov 11, 2023
English summary
ICC ODI World cup 2023 - 7 Biggest controversial and low points in the tournament உலக கோப்பை 2023 - 7 மறக்க முடியாத சர்ச்சைகளும், ஏமாற்றங்ளும்.. பட்டியல் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+