Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை 2023 - லீக் சுற்றில் நடந்த 7 சிறப்பு மிக்க தருணங்கள்.. மறக்க முடியாத சம்பவ பட்டியல்

மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் சுற்று நாளையுடன் முடிவடைகிறது. கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது.

இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நடைபெற்றது. யாருமே தீர்மானிக்க முடியாத அளவில் சில போட்டிகளின் முடிவு இருந்தது, இந்த உலகக் கோப்பையை பெஸ்ட்டாக மாற்றி இருக்கிறது.

ICC ODI World cup 2023 - 7 Most highlighted incidents happened so far in the tournament

இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஏழு சிறப்பு மிக்க தருணங்களை தற்போது பார்க்கலாம். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் என்ற இலக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார்.

இதேபோன்று இந்த தொடரில் அடுத்த சிறப்பு அம்சமாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சு படை செய்த சம்பவங்கள் தான் ரசிகர்கள் மனதில் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக முகமது சமி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த விக்கெட்டுகள் அபாரமானவை. சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் இணைந்து இந்த தொடர் முழுவதும் விக்கெட் வேட்டைகள் நடத்தினர். இதேபோன்று இந்த தொடரில் மூன்றாவது சிறப்புமிக்க விஷயமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்தியது இந்த தொடரின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போட்டி இந்தத் தொடரின் சிறப்பான போட்டியாக பார்க்கப்படுகிறது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றது.

இதேபோன்று பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியதும் இந்த தொடரின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தன்னுடைய 49வது சதத்தை அடித்து அசத்தியது ரசிகர்கள் மனதில் நீங்காத சம்பவமாக அமைந்திருக்கிறது. இதேபோன்று நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்த்ரா 23 வயதில் சதம் சதமாக விளாசியதும் குயின் டன் டி காக் தன்னுடைய கடைசி தொடரில் சதங்களை அடுத்தடுத்து அடித்து ஜொலித்ததும் சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 11, 2023, 11:53 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+