Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் மட்டும் ஆடி இருந்தால்.. இங்கிலாந்து செய்த மெகா தவறு.. தோல்விக்கு காரணமே இதுதான்

டெல்லி : ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமே, இங்கிலாந்து அணியின் அணித் தேர்வு தான். ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டது முதல் தவறு.

ICC ODI World Cup 2023 AFG vs ENG : Reason for England loss against Afghanistan

அதே போல போட்டி நடந்த டெல்லி ஆடுகளத்தையும் சரியாக புரிந்து கொள்ளாமல் முக்கியமான ஆல் - ரவுண்டரான மொயீன் அலியை அணியில் சேர்க்காமல் போனதே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஸ்பின்னர்கள் எங்கே? : முன்னதாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தும், அந்த அணியால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்களை இழந்த போதும் சுழற் பந்துவீச்சில் நிதானாமாக ஆடினார்கள். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன் குவிப்பு அதிகமாக இருந்தது. இதற்கு காரணம், டெல்லி ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பது கடினமாக இருந்தது தான்.

இங்கிலாந்து அணியில் அதில் ரஷித் மட்டுமே ஒரே ஒரு முழு நேர ஸ்பின்னர். பகுதி நேர ஸ்பின்னரான லியாம் லிவிங்க்ஸ்டன் இந்தப்ப் போட்டியில் 10 ஓவர்களை முழுதாக வீசினார். ஜோ ரூட் 4 ஓவர்கள் வீசினார்.

இந்த இரண்டு பகுதி நேர ஸ்பின்னர்களை தாண்டி மற்றொரு முழு நேர ஸ்பின்னர் ஆடி இருக்க வேண்டும். மொயீன் அலி பேட்டிங் ஆடும் திறன் கொண்ட ஸ்பின்னர். அவரை அணியில் சேர்க்கவில்லை இங்கிலாந்து அணி. அவரை இந்தப் போட்டியில் ஆட வைத்து இருந்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி மேலும் 10 ஓவர்களில் நிதான ஆட்டம் ஆட வேண்டி இருந்திருக்கும்.

மொயீன் அலி ஐபிஎல் தொடரில் இந்திய ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதால் நிச்சயம் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டு பெரிய தவறை செய்து அவரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது.

அதே போல, சேஸிங் செய்யும் போதும் மொயீன் அலி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். ஆப்கானிஸ்தான் பெரிய ஸ்கோரை அடிக்காமல் போயிருந்தால், இங்கிலாந்து அணி ஸ்கோரின் அழுத்தம் இல்லாமல் ஆடி இந்தப் போட்டியில் வென்று இருக்கலாம்.

இந்த உலகக்கோப்பை தொடரில் பெரிய அணிகளை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்த வாய்ப்பே இல்லை என பலரும் நினைத்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2023 உலகக்கோப்பையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், சுழற் பந்துவீச்சை நம்பாமல் போனது தான்.

Story first published: Sunday, October 15, 2023, 22:03 [IST]
Other articles published on Oct 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+