Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரையும் சும்மா விடமாட்டோம்.. 8 வருட சாபத்தை உடைத்த ஆப்கானிஸ்தான்.. பயத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்

டெல்லி : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருப்பது மற்ற அணிகளுக்கு பயத்தை கொடுத்துள்ளது.

அதற்கு காரணம், எட்டு வருடமாக ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து வந்த உலகக்கோப்பை சாபத்தை அந்த அணி உடைத்து இருக்கிறது.

ICC ODI World Cup 2023 : Afghanistan ended 8 year losing streak in ODI World Cup

2015 உலகக்கோப்பை தொடரில் இருந்து தொடர்ந்து 2019 உலகக்கோப்பை மற்றும் 2023 உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகள் வரை 14 உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.

அந்த தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டும் என போராடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விடிவு காலம் பிறந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இது சாதாரண வெற்றி அல்ல. 2019 உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்தை, ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்து அணி இன்னும் பலமான அணியாகவே பார்க்கப்படுகிறது. 2023 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் அரை இறுதிக்கு முன்னேறும் என அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட அணி இங்கிலாந்து.

அந்த அணியைத் தான் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருக்கிறது. இந்த வெற்றி வேறு சில அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் அரை இறுதி வாய்ப்பு என்னாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. இனி பலம் குறைந்த அணிகளான நெதர்லாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேற திட்டமிட்டு வந்தது.

ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவை விட பலமான இங்கிலாந்து அணியையே ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பதால் அந்த அணியின் அரை இறுதி கனவுக்கு மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அதே போல பாகிஸ்தான் அணி இதுவரை நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய பலம் குறைந்த அணிகளையே வீழ்த்தி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியால் துவண்டு போய் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்னும் பெரிய அணிகளையும் சந்திக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

ஆனால், இப்போது ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியதை கண்டு நிச்சயம் பாகிஸ்தான் அணி கதிகலங்கி இருக்கும். ஆப்கானிஸ்தான் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்தால் இந்த உலகக்கோப்பையில் பல எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படும்.

.

Story first published: Monday, October 16, 2023, 12:00 [IST]
Other articles published on Oct 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+