Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிட்டையர்ட் ஹர்ட் ஆக்கப் பார்த்த ஆப்கானிஸ்தான் கோச்.. வெளியேற மறுத்த மேக்ஸ்வெல்.. உச்சகட்ட நாடகம்

மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் கடும் கால் மற்றும் முதுகு வலிக்கு நடுவே அதிரடியாக பேட்டிங் ஆடினார்.

இதன் இடையே ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், மேக்ஸ்வெல்லை ரிட்டையர்ட் ஹர்ட் ஆக்க முயன்றார்.

ஆனால், ஆஸ்திரேலிய கேப்டனே கேட்ட போதும் பிடிவாதமாக இருந்த கிளென் மேக்ஸ்வெல் வலியுடன் ஆடி கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆட்டத்தை பதிவு செய்து இரட்டை சதம் அடித்தார்.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 291 ரன்கள் வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா அணி துரத்தியது. அப்போது 91 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பாட் கம்மின்ஸ் இருந்தனர்.

கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே இதில் தேர்ந்த பேட்ஸ்மேன். அவரும் அதிரடி ஆட்டம் ஆடி சதம் கடந்தார். கம்மின்ஸ் ரன் அடிக்காமல் நின்றார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது. இந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கடும் கால் வலி ஏற்பட்டது. அவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சை செய்து இருந்தார் என்பதால் அவருக்கு இது போன்ற வலி ஏற்படும். அது நேற்றைய போட்டியின் போதும் ஏற்பட்டது.

ICC ODI World Cup 2023 AUS vs AFG : Afghanistan coach asks for Glenn Maxwell retired hurt

அதனால், அடிக்கடி ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்து வலியை போக்க முதலுதவி செய்து கொண்டே ஆடினார். ஒரு கட்டத்தில் ஒரே ஓவரில் இரண்டு முறை வலியால் துடித்தார். அப்போது இரண்டு முறையும் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 41வது ஓவரின் போது அவர் இரண்டாவது பந்தை தட்டி விட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அவருக்கு மீண்டும் வலி அதிகரித்தது. அதனால், களத்தில் படுத்தே விட்டார். அதனால் ஆட்டம் தடைபட்டதால் பொறுமை இழந்த ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், இது எத்தனை முறை நடக்கப் போகிறது என நான்காவது அம்பயரிடம் கேட்டார். இப்படி தடைபட்டுக் கொண்டே இருந்தால் எப்படி பந்து வீசுவது? எனக் கேட்டார். அவர் கொடுத்த அழுத்தம் கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற அவர் முயற்சி செய்தார்.

அப்போது, ஆஸ்திரேலிய கேப்டன் மேக்ஸ்வெல்லிடம் அவரால் தொடர்ந்து ஆட முடியுமா? எனக் கேட்டார். அடுத்த பேட்ஸ்மேன் ஆன ஆடம் ஜம்பா பவுண்டரி எல்லைக்கு வந்து விட்டார். ஆனாலும், மேக்ஸ்வெல் வெளியேற மறுத்தார். அதனால் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் எடுத்த முயற்சி வீணானது.

கிளென் மேக்ஸ்வெல் வலிக்கு நடுவே ஆடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிய 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

Story first published: Wednesday, November 8, 2023, 8:31 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+