மும்பை : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் பேட்டிங் செய்த போது ஆப்கானிஸ்தான் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நடமாட்டம் இருப்பதாக தொடர்ந்து அம்பயரிடம் புகார் அளித்தார்.
தன்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை என அவர் கூறினார். அவர் தொடர்ந்து இதை செய்யவே கடுப்பான ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜா கொடுத்த பதிலடி நேரலையில் காட்டப்பட்டதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் குவித்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடிய போது விரைவாக விக்கெட்களை இழந்தது.

6வது ஓவரில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அப்போது மார்னஸ் லாபுஷேன் களமிறங்கினார். அவர் பேட்டிங் செய்ய நின்ற போது ஆப்கானிஸ்தான் அணியின் டிரஸ்ஸிங் அறை நேர் எதிரில் இருந்தது. அதில் யாரோ எழுந்து சென்றனர். அதனால் தன்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை என லாபுஷேன் பேட்டிங் நின்ற பின் விலகினார்.
அடுத்த சில பந்துகள் கழித்து மீண்டும் இதை செய்தார். அம்பயரிடம் ஆப்கானிஸ்தான் டிரஸ்ஸிங் அறையில் நடமாட்டம் இருப்பதால் என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை என புகார் தெரிவித்தார். இது தொலைக்காட்சி நேரலையிலும் காட்டப்பட்டது. லாபுஷேன் இந்த புகாரை கூறியதும் நேரலையில் ஆப்கானிஸ்தான் அறை காண்பிக்கப்பட்டது.
அப்போது அங்கு எழுந்து சென்றது ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜாதான் என்பது தெரிய வந்தது. அதை உணர்ந்த அஜய் ஜடேஜா, பேட்டிங் ஆடாமல் இதை எல்லாம் ஒரு புகாராக கூறிக் கொண்டு இருந்த லாபுஷேனை நேரலையில் கிண்டல் செய்யும் வகையில் நடனம் ஆடி அவரை கிண்டல் செய்தார்.
இந்த காட்சி நேரலையில் வெளியானது. மைதானத்தில் இருந்த பெரிய திரையிலும் காட்டப்பட்டது. இதை அடுத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து அஜய் ஜடேஜா கொடுத்த பதிலடியை ரசித்தனர். லாபுஷேன் 14 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.