For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய வீரரை தூக்கிய பாகிஸ்தான்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடி முடிவு

பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஸ்பின்னர் ஆன ஷதாப் கான் நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக உசாமா மிர் என்ற ஸ்பின்னரை களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் அணி.

ICC ODI World Cup 2023 AUS vs PAK : Pakistan dropped Shadhab Khan

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் ஆடுகளத்தில் இரண்டாவதாக பந்து வீசுவது சவாலாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்தது.

அடுத்து பாகிஸ்தான் அணியை அறிவித்த போது ஷதாப் கானை நீக்கி இருப்பதை கூறினார் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம். அவருக்கு பதிலாக உசாமா மிர் வாய்ப்பு பெற்றார். மறுபுறம் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அந்த தோல்வி அழுத்தத்தில் இருந்து மீள வேண்டும் என்பதால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தப் போட்டியில் ஆடியது.

ICC ODI World Cup 2023 AUS vs PAK : Pakistan dropped Shadhab Khan

ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பே கூட நழுவிப் போகலாம் என்பதால் ஆஸ்திரேலியாவும் அழுத்தத்தில் இந்தப் போட்டியில் ஆடியது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம் : அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Story first published: Friday, October 20, 2023, 14:27 [IST]
Other articles published on Oct 20, 2023
English summary
ICC ODI World Cup 2023 AUS vs PAK : Pakistan dropped Shadhab Khan and included USama mir in his place.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+