For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாமனார் ஷாஹித் அப்ரிடி சாதனைக்கு வேட்டு வைத்த மருமகன்.. பாகிஸ்தான் வீரர் செய்த தரமான சம்பவம்

பெங்களூர் : தன் மாமனார் ஷாஹித் அப்ரிடி சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார் அவர் மருமகன் ஆன பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி.

இந்த உலகக்கோப்பை தொடரிலேயே அதை முறியடித்து மாமனாரின் சாதனையை பின் தள்ளவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக தந்தை - மகன் கிரிக்கெட் வீரர்களாக ஆடி ஒருவர் சாதனையை, ஒருவர் முறியடிக்கும் நிகழ்வுகளை பார்த்திருப்போம்.

ஆனால், பாகிஸ்தான் அணியில் மாமனார் ஷாஹித் அப்ரிடியின் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய உலகக்கோப்பை சாதனையை சமன் செய்து இருக்கிறார் மருமகன் ஷஹீன் ஷா அப்ரிடி.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்ட மைதானம் என்பதால் எப்படியும் ஆஸ்திரேலியா 300 ரன்களை தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ICC ODI World Cup 2023 AUS vs PAK : Shahid Afridi record equalled by his Son-in-law

அதே போலவே, ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டம் ஆடியது. குறிப்பாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் சதம் அடித்து பாகிஸ்தான் அணியை சிதறவிட்டனர். ஆனால், இவ்வளவுக்கு நடுவிலும் தன் திறமையை காட்டினார் ஷஹீன் ஷா அப்ரிடி.

இந்தப் போட்டியில், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். அதன் பின் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை சாய்த்தார். கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹெசல்வுட் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்தார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் முதல்முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஷஹீன் ஷா அப்ரிடி, உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இரண்டு முறை ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் இருப்பது ஷாஹித் அப்ரிடி. அவரது சாதனையை தற்போது அவரது மருமகன் ஷஹீன் ஷா அப்ரிடி சமன் செய்துள்ளார். இதே உலகக்கோப்பையில் இன்னும் ஒரு முறை ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினால் மாமனாரை மிஞ்சிய மருமகன் ஆகி விடுவார் ஷஹீன்.

2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு தான் ஷஹீன் ஷா அப்ரிடி, ஷாஹித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு கூட தான் 5 விக்கெட் வீழ்த்துவேன் என சவால் விட்டு இருந்தார். இப்போது அதை செய்து இருக்கிறார். ஆக, திருமணம் முடிந்த கையோடு உலகக்கோப்பை ஆட வந்த ஷஹீன் ஷா அப்ரிடி, மாமனாரின் சாதனைக்கு வேட்டு வைக்க துடித்து வருகிறார்.

Story first published: Friday, October 20, 2023, 20:11 [IST]
Other articles published on Oct 20, 2023
English summary
ICC ODI World Cup 2023 AUS vs PAK : Shahid Afridi record equalled by his Son-in-law Shaheen Shah Afridi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+