For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன டெஸ்ட் மேட்ச்சா ஆடுறீங்க? சொந்த அணிக்கே உலை வைத்த பென் ஸ்டோக்ஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு உதவி

அகமதாபாத் : இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கிறேன் என்ற பெயரில் டெஸ்ட் மேட்ச் போல ஆடி தன் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஒரு வகையில் பென் ஸ்டோக்ஸ் உதவி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ICC ODI World Cup 2023 : Ben Stokes played like test match and became reason for England loss

போட்டி முடிந்த உடன் ஸ்கோர்போர்டை பார்த்தால் பென் ஸ்டோக்ஸ் 90 பந்துகளுக்கு 64 ரன்கள் குவித்து இருப்பார். இங்கிலாந்து அணியிலேயே அதிக ரன் எடுத்த வீரர் அவர் தான் என்று தான் நினைப்போம்.

ஆனால், அவர் முதல் 8 ரன்களை எடுக்க மட்டும் 30 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதனால், 287 ரன்களை சேஸிங் செய்த மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் ரன் ரேட் அழுத்தம் ஏற்பட்டது. அதனாலேயே இங்கிலாந்து அணி தோல்வியும் அடைந்தது. எப்படி பென் ஸ்டோக்ஸ் இதை செய்தார்?

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 286 ரன்கள் குவித்து இருந்தது. அந்த அணியின் மார்னஸ் லாபுஷேன் 71 ரன்கள் குவித்து இருந்தார். ஸ்டீவ் ஸ்மித் 44, கேமரான் கிரீன் 47, மார்கஸ் ஸ்டோனிஸ் 35 ரன்கள் சேர்த்து இருந்தனர். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

அடுத்து இங்கிலாந்து அணி ஆட வந்தது. அப்போது துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆனார். ஜோ ரூட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வந்தார். அப்போது மற்றொரு துவக்க வீரர் மலன் களத்தில் இருந்தார்.

இருவரும் ஓவருக்கு 5 - 6 ரன்கள் அடித்தால் வெற்றியை நோக்கி செல்லலாம் என்ற நிலை இருந்தது. மேலும், இரவு நேரம் என்பதால் அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பந்து மிகவும் ஈரமாக இருந்தது. வீரர்கள் கைகளும் ஈரமாக இருந்ததால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பந்து வீசவே சிரமப்பட்டனர்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், 30 பந்துகளில் வெறும் 8 ரன் மட்டும் எடுத்து சோதித்தார் ஸ்டோக்ஸ். அவருக்கு பேட்டிங் செய்வதிலோ, அல்லது ரன் குவிப்பதிலோ ஏதோ சிக்கல் இருந்தது. அதனால், டெஸ்ட் போட்டி போல ஆடிய ஸ்டோக்ஸ் பந்தை வீணாக்கிக் கொண்டு இருந்தார்.

அதனால், ரன் ரேட் பாதாளத்துக்கு சரிந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் தங்கள் விக்கெட்களை இழந்தனர். மலன் 50 ரன்கள் எடுத்தும், கேப்டன் ஜோஸ் பட்லர் 1 ரன் எடுத்தும் ஸ்டோக்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்கள் விக்கெட் வீழ்ச்சிக்கு ஸ்டோக்ஸ் ஒரு முக்கிய காரணம்.

30 பந்துகளுக்கு பின்னர் ரன் குவிக்கத் துவங்கினார் ஸ்டோக்ஸ். 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனாலும், ரன் ரேட் அழுத்தம் மற்ற பேட்ஸ்மேன்களையும் காவு வாங்கியது. இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் தன் முதல் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி 2023 உலகக்கோப்பை தொடரில் தன் அரை இறுதி வாய்ப்பையும் இழந்தது.

Story first published: Saturday, November 4, 2023, 23:06 [IST]
Other articles published on Nov 4, 2023
English summary
ICC ODI World Cup 2023 : Ben Stokes played like test match and became reason for England loss against Australia by 33 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+