Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை - பாகிஸ்தான் பவுலரை கூட முந்தாத பும்ரா, ஷமி.. ஆனாலும் சூப்பர்.. எந்த இடம்?

மும்பை : 2023 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி முதல் பத்து இடங்களில் இடம் பெற்று உள்ளனர்.

பும்ரா அல்லது முகமது ஷமி அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் வாய்ப்பை தவற விட்டனர். இவர்கள் இருவரையும் விட பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி அதிக விக்கெட் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ICC ODI World Cup 2023 : Bumrah, Mohammed Shami dominates best bowlers list in world cup 2023

ஆனாலும், குறைந்த பவுலிங் சராசரி, சிறந்த பவுலிங் எகானமி ஆகியவற்றில் பும்ரா, முகமது ஷமி ஆதிக்கம் செலுத்தி சிறந்த பந்துவீச்சாளர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் - ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 22 விக்கெட்கள், இலங்கையின் மதுசங்கா 21 விக்கெட்கள், தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸி 18 விக்கெட்கள், பாகிஸ்தானின் ஷஹீன் ஷா 18 விக்கெட்கள், இந்தியாவின் பும்ரா 17 விக்கெட்கள்.

முகமது ஷமி ஐந்து போட்டிகளில் 16 விக்கெட்கள வீழ்த்தி இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா ஒன்பது போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி எட்டாவது இடத்தில் இருக்கிறார். குல்தீப் யாதவ் 14 விக்கெட்கள் வீழ்த்தி 13வது இடத்தில் இருக்கிறார்.

விக்கெட் வீழ்த்துவதில் இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் ஐந்து இடங்களை அதிகம் பிடிக்கவில்லை என்றாலும், சிறந்த எகானமி மற்றும் சிறந்த பவுலிங் சராசரியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சிறந்த எகானமி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு போட்டியில் ஆடிய இந்திய வீரர் அஸ்வின் 3.40 எகானமியுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இரண்டு இடங்களில் பும்ரா - 9 போட்டிகள், 3.65 எகானமி, ரவீந்திர ஜடேஜா - 9 போட்டிகள், 3.97 எகானமி உள்ளனர். குல்தீப் யாதவ் 4.15 எகானமியுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

குறைந்த பவுலிங் சராசரி வைத்துள்ள பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ரோஹித் சர்மா - 1 போட்டி, சராசரி 7, முகமது ஷமி - 5 போட்டிகள், சராசரி 9.56, விராட் கோலி - 1 போட்டி, சராசரி 15, பும்ரா - 9 போட்டிகள், 15.64 உள்ளனர். ஜடேஜா 9 போட்டிகளில் 18.25 சராசரியுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதில் ரோஹித் சர்மா, விராட் கோலியை விடுத்து மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் ஆறு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, விக்கெட் வீழ்த்துவதில் சற்று பின் தங்கி இருந்தாலும், எகானமி மற்றும் பவுலிங் சராசரியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருப்பது தெரிய வருகிறது.

Story first published: Monday, November 13, 2023, 12:06 [IST]
Other articles published on Nov 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+