Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு stats பார்த்திருக்க மாட்டீங்க? தாடி இருந்தா இந்திரன், இல்லனா சந்திரன்

மும்பை : கிரிக்கெட் விளையாட்டில் உங்கள் வாழ்க்கையில் பல ஸ்டேட்ஸ் மற்றும் ரெகார்டுகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு ஸ்டேட்ஸ் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

எப்படி தில்லு முல்லு படத்தில் மீசை இருந்தால் இந்திரன் மீசை இல்லை என்றால் சந்திரன் என்று ரஜினி வருவாரோ, அதேபோல் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தாடி இருந்தால் எப்படி விளையாடிருக்கிறார்? தாடி இல்லாமல் எப்படி விளையாடுகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ICC ODI World cup 2023 - crazy Shreyas Iyer stats in the tournament with and without beard

இந்த உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் அணியில் இருக்க வேண்டுமா என்று பலரும் விமர்சித்து வந்தனர். அதற்கு தகுந்தார் போல் அவரும் பெரிய அளவில் முதல் சில ஆட்டங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆனால் போகப் போக ஸ்ரேயாஸ் தமக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டார்.

சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஸ்ரேயாஸ் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் என்பதால் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் மூன்று அரை சதம், ஒரு சதம் என பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆனால் ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் இந்த தொடரில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதாவது தாடி வைத்திருந்தால் ஒரு மாதிரியும் தாடி இல்லாமல் வேறொரு மாதிரியும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது ஸ்ரேயாஸ் தாடியுடன் 0(3), 25*(23), 53*(62), 19(25),33 (29),4 (16) ஆகிய ரன்களை தான் அடித்திருக்கிறார். அதுவே தாடி இல்லாமல் 82(56),77(87), 128(94)என ஸ்ரேயாஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இதனை ஒரு stats ஆக போட்டுள்ள ரசிகர்கள் ஸ்ரேயாஸ் இனி தாடியை வைக்க வேண்டாம் என்றும் தாடி இல்லாமல் தான் அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் கூறி வருகின்றனர். இதைப் பார்த்து ரசிகர்கள் இப்படி எல்லாமா ஸ்டேட் போடுவீங்க என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Story first published: Monday, November 13, 2023, 15:09 [IST]
Other articles published on Nov 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+