Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச கேப்டனுக்கு அடி உதை.. உலகக்கோப்பை தோல்வியால் ரசிகர்கள் கோபம் என வெளியான வீடியோ.. உண்மை என்ன?

தாகா : வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனை ரசிகர்கள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இதில் உண்மை இல்லை எனவும் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. லீக் சுற்றில் பத்து அணிகள் இடம் பெற்ற நிலையில், வங்கதேச அணியால் எட்டாவது இடம் மட்டுமே பெற முடிந்தது.

வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

ICC ODI World Cup 2023 : Did Shakib Al Hasan got hit by fans at Dhaka airport?

அது மட்டுமின்றி, உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன் மூத்த வீரர் தமிம் இக்பாலை அணியை விட்டு நீக்க திரை மறைவில் பெரும் போராட்டம் நடத்தினார் ஷகிப் அல் ஹசன். தமிம் இக்பால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவேன் என்றெல்லாம் கூறி அவரை நீக்க வைத்தார்.

அப்போதே வங்கதேச ரசிகர்கள், ஷகிப் அல் ஹசன் மீது பெரும் அதிருப்தி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரிலும் சொதப்பியது. அப்போதே சிலர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் அவருக்கு மோசமான வரவேற்பு தான் கிடைக்கும் என கூறி வந்தனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை முடிந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் தாகா விமான நிலையத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் சிலர் ஷகிப் அல் ஹசன் சட்டையை பிடித்து இழுத்து அவரை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், உண்மையில் அந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஒன்று. அப்போது அவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது அவர் விமான நிலையத்தில் அடி வாங்குகிறார் என மாற்றி பரப்பி வருகின்றனர். உலகக்கோப்பையில் நடந்த சம்பவங்களும் அதற்கேற்ப இருக்கவே, பலரும் இந்த வீடியோவை உண்மை என நம்பி பரப்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, November 21, 2023, 13:50 [IST]
Other articles published on Nov 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+