For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை - பாகிஸ்தான் செமி பைனல் பிளான் எல்லாம் வீணாப்போச்சு.. ஆறுதல் வெற்றி கூட இல்லை

கொல்கத்தா : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை அரை இறுதிக்கு போகலாம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது.

பாகிஸ்தான் அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற திட்டம் போட்டி கடைசியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ICC ODI World Cup 2023 ENG vs PAK : Pakistan captain plans failed as they lost to England

2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது தான் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்தி அரை இறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நிலை இருந்தது.

இப்படி இக்கட்டான நிலையில் இருந்தாலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் போட்டிக்கு முந்தைய ட் தினம் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்து பாக்கர் ஜமான் உதவியுடன் பெரிய ஸ்கோரை அடிப்போம். அதன் பின் இங்கிலாந்து அணியை எங்கள் வேகப் பந்துவீச்சால் 50 - 100 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெறுவோம் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் விஷயமே தவறாக சென்றது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதனால், முதலில் பேட்டிங் செய்யலாம் என்ற பாகிஸ்தான் அணியின் எண்ணம் தோல்வியில் முடிந்தது.

அடுத்து பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கு செல்ல இருந்த கடைசி வாய்ப்பு, இங்கிலாந்து அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அதை மிகவும் குறைந்த பந்துகளில் அடித்து வெற்றி பெறுவது தான். ஆனால், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அந்த இலக்கை 6.4 ஓவரில் எட்டினால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

அதாவது 40 பந்துகளில் 338 ரன்கள் எடுக்க வேண்டும். அனைத்து பந்துகளிலும் சிக்ஸ் அடித்தால் கூட 240 ரன்கள் தான் எடுக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி அப்போதே அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்து கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறலாம் என சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி 244 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தன் நான்காவது வெற்றியை பதிவு செய்து சாம்பியன்ஸ் ட்ராபி வாய்ப்பை உறுதி செய்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 59, ஜோ ரூட் 60, பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா 2, ஹாரிஸ் ரௌப் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ஆகா சல்மான் 51 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் அசாம் 38, ரிஸ்வான் 36 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பவே பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, November 11, 2023, 21:53 [IST]
Other articles published on Nov 11, 2023
English summary
ICC ODI World Cup 2023 ENG vs PAK : Pakistan plans failed as they lost to England in world cup 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+