Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் மட்டும் அரையிறுதிக்கு வேண்டாம்.. வந்தா இந்தியாவுக்கு தான் ஆபத்து.. கெஞ்சும் ரசிகர்கள்

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.

நியூசிலாந்து என்றாலே இந்திய அணிக்கு சமீப காலமாக கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கடந்த உலகக்கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ICC odi world cup 2023 - Fans asking icc not to have umpire Richard kettleborough for india semi final

எனினும் நடப்பு உலக கோப்பை தொடரில் நியூஸிலாந்தை இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொண்டால் முதல் அரை இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் தான் நடைபெறும். அதுவே பாகிஸ்தானை எதிர்கொண்டால் இந்திய அணி கொல்கத்தாவில் தன்னுடைய அரையிறுதியில் விளையாடும்.

தற்போது நியூசிலாந்து உடன் அரையிறுதி என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தான் ரசிகர்கள் ஒரு கோரிக்கையை ஐசிசிக்கு வைத்திருக்கிறார்கள். அதாவது இந்தியா விளையாடும் அரை இறுதி ஆட்டத்தில் தயவுசெய்து இங்கிலாந்து சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோவை சேர்க்க வேண்டாம் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்த ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ தான் நடுவராக இருந்தார். அப்போது இந்திய அணி அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் போது ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ மூன்றாம் நடுவராக இருந்து கில்லுக்கு தவறான முறையில் அவுட் வழங்கியது பெரும் சர்ச் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக ரிச்சர்ட் கெட்டலப்ரோ இந்தியாவுக்கு ராசியான நடுவர் கிடையாது என்றும் அவர் வந்தால் இந்தியாவுக்கு அது மனதளவில் பாதகத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த நடுவர் வந்தால் நாங்கள் தோற்று விடுவோம் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைக்கும் பேச்சுக்கும் வேண்டுமானால் கேட்க நன்றாக இருக்கும்.

ICC odi world cup 2023 - Fans asking icc not to have umpire Richard kettleborough for india semi final

கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அன்றைய நாளில் யார் திறமையின் படி சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி கிட்டும். எனவே ரிச்சர்ட் கெட்டல்ப்ரோ இந்தியா நியூசிலாந்து விளையாடும் அரையிறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 9, 2023, 19:04 [IST]
Other articles published on Nov 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+