For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் உட்பட 4 பேருக்கு வைரஸ் தொற்று.. மொத்த அணிக்கும் பயிற்சி ரத்து

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், பெங்களூரில் அடுத்த போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை.

ICC ODI World Cup 2023 : Four Paksitan team players got viral infections says reports

இதை அடுத்து பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் யாருக்கு காய்ச்சல் : பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் பாக்கர் ஜமான் ஆகிய நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

தோல்வி : அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூர் கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது.

பயிற்சி செய்யவில்லை : இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இன்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

முக்கிய வீரர்கள் : ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அப்துல்லா ஷபிக் அந்த அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். சமீபத்தில் தான் ஷபிக் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் வீரர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் இருக்கிறது.

என்ன நிலையில் இருக்கிறார்கள்? : இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், சில வீரர்களுக்கு கடந்த சில நாட்களில் காய்ச்சல் இருந்தது உண்மைதான். ஆனால், அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அனைவரும் உடல்நலம் தேறி உள்ளனர். விரைவில் அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் நிலையை எட்டுவார்கள் என கூறி இருக்கிறார்.

Story first published: Tuesday, October 17, 2023, 19:37 [IST]
Other articles published on Oct 17, 2023
English summary
ICC ODI World Cup 2023 : Four Paksitan team players got viral infections says reports. Pakistan team also skipped first day of their practice in Bangalore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+