இது போதுங்க.. மகன் கொடுத்த பிறந்தநாள் பரிசு.. நெகிழ்ந்து போன ஹர்திக் பாண்டியா!
டெல்லி : ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் இருக்கும் நிலையில், தன் 2 வயது மகன் தனக்காக ஒரு பிறந்தநாள் பரிசை தானே உருவாக்கி கொடுத்ததை பற்றிக் கூறி நெகிழ்ந்தார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியன்று தான் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு 30வது பிறந்தநாள். போட்டிக்கு முன் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருடன் சிறிய அளவில் கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர், "இந்த பிறந்தநாளுக்கு எந்த பெரிய கொண்டாட்டமும் இல்லை. நான் எழுந்த போது என் மகன் எனக்கு ஒரு போர்டை பரிசாக கொடுத்தான். அதை அவனே இரண்டு நாட்களாக செய்து எனக்கு கொடுத்தான். அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்' என்றார்.
ஹர்திக் பாண்டியா தன் மகனின் பிறந்தாளை பெரிய அளவில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் மகனின் முதல் பிறந்தநாளை பாஸ் பேபி எனும் ஆங்கில திரைப்பட அம்சங்கள் கொண்ட அலங்காரம் செய்து கொண்டாடினார்.
இரண்டாவது பிறந்தநாளை ஜுராசிக் பார்க் திரைப்பட அம்சங்கள் கொண்ட அலங்காரம் செய்து கொண்டாடினார். அப்போது அவர் 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடியதால் மகனுடன் இருக்க முடியவில்லை என ஏக்கம் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அவரது 30வது பிறந்தநாளை அவர் மகனுடன் கொண்டாட முடியவில்லை என வருத்தத்தில் இருந்தாலும், மகன் தந்த பரிசை வாங்கி நெகிழ்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசியது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்து 272 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 35 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது.
பாண்டியா இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் அரைசதம் அடித்த ஓமர்சாய் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு திருப்பம் கொடுத்தார். ரோஹித் சர்மா சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications