Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் சிறந்த பிளேயிங் லெவன் எது? 11 வீரர்களை தேர்வு செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பிரிவில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை தேர்வு செய்து அதனை சிறந்த பிளேயிங் லெவன் அணி என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அதில் நடப்பு உலக கோப்பை தொடரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறது. இதில் ஐந்து இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 ICC odi world cup 2023 - Here is the Best Playing xi selected by iceland cricket

இந்தப் பட்டியலை தற்போது பார்க்கலாம். சிறந்த பிளேயிங் லெவன் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடக்க வீரராக நடப்பு உலக கோப்பை தொடரில் சதங்களை அடித்து அமர்க்களப்படுத்திய குயிண்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதேபோன்று நம்பர் மூன்றாவது வரிசையில் உலகின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம்பெற்றிருக்கிறார். நான்காவது வீரராக நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று நடுவரிசையில் 5வது வீரராக நியூசிலாந்து வீரர் டேரல் மிச்சலும், ஆறாவது வீரராக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல்லுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஏழாவது வீரராக இந்தியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம் பெற்றிருக்கிறார். எட்டாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் சிறந்த ஆணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 9 ஆவது வீரராக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஆடம் சம்பா இடம் பெற்றிருக்கிறார்.

பத்தாவது வீரராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று 11வது வீரராக உலகின் முன்னணி வீரரான பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கையை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 9, 2023, 15:21 [IST]
Other articles published on Nov 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+