For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் சர்மா எல்லாம் இல்லை இனி இவர்தான் டாப்.. யாரும் தொட முடியாத ஸ்ட்ரைக் ரேட்.. மேக்ஸ்வெல் அதிரடி

மும்பை : கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன ரோஹித் சர்மா, பிரண்டன் மெக்குல்லம், ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர் என எல்லோரையும் முந்தி ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் ரெக்கார்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.

2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடி பேட்டிங் ஆடி வருகிறார். ஒன்று, இரண்டு போட்டிகளில் அணியின் சூழ்நிலை காரணமாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு கீழ் சென்றது. மற்றபடி துவக்க வீரரான ரோஹித் முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆடி ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் வந்தார்.

ICC ODI World Cup 2023 Highest Strike Rate : Glenn Maxwell beat Rohit Sharma, AB de Villiers

ரோஹித் சர்மா 2023 உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் ஆடி 442 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.77. முந்தைய தினம் வரை நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதல் பத்து இடங்களில் இருப்பவர்களில் ரோஹித் சர்மா தான் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தாலும் அவர்களால் அதிக ரன் குவிக்க முடியாது. ஸ்ட்ரைக் ரேட்டிற்காக பவுண்டரி அடிக்க முயலும் போது விக்கெட்டை பறிகொடுக்க நேரிடும். ஆனால், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 122 ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்தது பெரிய விஷயமாக இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதத்துக்கு பின் எல்லாமே மாறி விட்டது. அந்தப் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்தார். அதன் ஸ்ட்ரைக் ரேட் 157.03 ஆகும். இதே உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 44 பந்துகளில் 106 ரன்கள் குவித்து இருந்தார். அந்த ஆட்டத்தின் ஸ்ட்ரைக் ரேட் 240.91 ஆகும்.

இதை அடுத்து 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல் 7 போட்டிகளில் ஆடி 397 ரன்கள் அடித்து ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 152.69 ஆகும். அதிக ரன்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கும் வீரர்களில் அவர் தான் இப்போது அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

அது மட்டுமின்றி இதுவரை நடந்த ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலிலும் கிளென் மேக்ஸ்வெல் 161.51 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று வரும் கிளென் மேக்ஸ்வெல் 23 இன்னிங்க்ஸில் 898 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 161.51 ஆகும்.

அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 121.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார். முதல் இடத்துக்கும், இரண்டாம் இடத்துக்கும் சுமார் 40 ஸ்ட்ரைக் ரேட் வித்தியாசம் உள்ளது. அதனால், மேக்ஸ்வெல் சாதனையை அத்தனை எளிதில் இனி ஒரு பேட்ஸ்மேனால் தொட முடியாது.

இதே பட்டியலில் மேக்ஸ்வெல், டேவிட் மில்லரை தொடர்ந்து பிரண்டன் மெக்குல்லம் (ஸ்ட்ரைக் ரேட் - 120.84), ஏபி டி வில்லியர்ஸ் (ஸ்ட்ரைக் ரேட் - 117.29), கபில் தேவ் (ஸ்ட்ரைக் ரேட் - 115.14), ஷேன் வாட்சன் (ஸ்ட்ரைக் ரேட் - 108.06), வீரேந்தர் சேவாக் (ஸ்ட்ரைக் ரேட் - 106.17), ரோஹித் சர்மா (ஸ்ட்ரைக் ரேட் - 102.97), எய்டன் மார்கிரம் (ஸ்ட்ரைக் ரேட் - 102.20), டேவிட் வார்னர் (ஸ்ட்ரைக் ரேட் - 101.05) முதல் பத்து இடங்களில் உள்ளனர்.

Story first published: Wednesday, November 8, 2023, 17:20 [IST]
Other articles published on Nov 8, 2023
English summary
ICC ODI World Cup 2023 Highest Strike Rate : Glenn Maxwell beat Rohit Sharma, AB de Villiers and Brendon McCullum in highest strike rate players in world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+