Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரா பவுலிங் போடப் போறாரு? பேட்ஸ்மேன்களை பதற வைத்த தமிழ்நாட்டு மருமகன்.. முக்கிய பவுலரான ரகசியம்

லக்னோ : யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பவுலராக மாறி இருக்கிறார் கிளென் மேக்ஸ்வெல்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும், சிறப்பாக பந்து வீசிய மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்கா போட்டியிலும் தன் ஸ்பின் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தினார்.

ICC ODI World cup 2023 : How Glenn Maxwell becomes prominent spinner

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்ற பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால், தமிழக ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டு மருமகன் என அழைக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி மிக மோசமான நிலையில் தான் உலகக்கோப்பை தொடரில் ஆட இந்தியா வந்தது. அப்போது அந்த அணியில் சரியான துவக்க வீரர் இல்லை. ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே இருந்தார். முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தில் இருந்து அப்போது தான் அணிக்கு திரும்பி இருந்தனர். அப்போது காயத்தில் இருந்து மீண்டு, அணியின் ஆல் - ரவுண்டராக இடம் பெற்று இருந்தார் மேக்ஸ்வெல்.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதுவே அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

அடுத்து உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக 8 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருநாள் தொடரின் தாக்கத்தால் அவர் பந்துவீச்சை பயத்துடனே அணுகினர். அவர் ஓவரில் அதிக பவுண்டரி அடிக்க ஆசைப்படவில்லை.

சரி, இந்திய அணி மட்டும் தான் இப்படி அவரை கண்டு அஞ்சுகிறது என பார்த்தால், தற்போது தென்னாப்பிரிக்கா அணியும் லக்னோவில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் அவர் பந்துவீச்சில் பம்மி பதுங்கி இருக்கிறது.

ICC ODI World cup 2023 : How Glenn Maxwell becomes prominent spinner

இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியிலேயே சிறந்த பந்துவீச்சை வீசி இருந்தார். பகுதி நேர ஸ்பின்னராக இருந்த மேக்ஸ்வெல் எப்படி முழு நேர ஸ்பின்னராக மற்ற அணிகளை பயமுறுத்தி வருகிறார்?

இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான். மேக்ஸ்வெல் அதிரடி பேட்டிங் திறன் கொண்ட ஆல் - ரவுண்டர் என்பதால் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் இவரை வாங்க கடும் போட்டி இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்களிலேயே அதிக ஐபிஎல் தொடரில் ஆடி இருக்கும் சில வீரர்களில் மேக்ஸ்வெல்-ம் ஒருவர்.

ஐபிஎல் தொடரில் நிறைய பந்து வீசி இருக்கிறார். அதன் மூலம், இந்திய ஆடுகளங்களை பற்றிய புரிதல் அவருக்கு இயல்பாகவே உள்ளது. அதனால் தான் இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் மேக்ஸ்வெல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

Story first published: Thursday, October 12, 2023, 18:43 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+