Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200 ரன் அடிக்க ஆஸ்திரேலிய கேப்டன் சொன்ன பிளான் அப்படியே செய்த மேக்ஸ்வெல்.. வெற்றிக்கு காரணமே அதுதான்

மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு திட்டத்தை மேக்ஸ்வெல்-லிடம் கூறினார்.

கடுமையான வலியில் இருந்தபோதும் கேப்டன் சொன்ன திட்டத்தை செயல்படுத்தினார் மேக்ஸ்வெல். அதுவே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய காரணம்.

தன் திட்டத்தின் படி கம்மின்ஸ்-உம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ஆப்கானிஸ்தான் அணியால் அவர்கள் திட்டத்தை உடைக்கவே முடியவில்லை.

ICC ODI World Cup 2023 : How Pat Cummins idea worked well against Afghanistan?

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் குவித்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியது.

அப்போது களத்தில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருந்தனர். வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலை. கம்மின்ஸ் பெரிய பேட்ஸ்மேன் இல்லை. அவரால் அவுட் ஆகாமல் 200 ரன்கள் அடிப்பது எல்லாம் சாத்தியம் இல்லை. அதே சமயம் கிளென் மேக்ஸ்வெல், சமீபத்தில் தான் அதிரடி ஆட்டம் ஆடி 43 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். அதனால், அவர் அதிரடி ஆட்டம் ஆடினால் 200 ரன்களை எட்டலாம்.

அவர் அவுட் ஆகாமல் இருக்கும் வரை கம்மின்ஸ் தன் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் அந்த திட்டம். ஒருவேளை மேக்ஸ்வெல் அவுட் ஆகிவிட்டால் அடுத்து ஜாம்பா மற்றும் ஹேசல்வுட் மட்டுமே பேட்டிங் செய்ய வேண்டும். அவர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியாது. அவர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிப்பதே கடினம்.

எனவே, ஓரளவு பேட்டிங் திறன் கொண்ட கம்மின்ஸ் தன் விக்கெட்டை கடைசி வரை காப்பாற்றினால் மட்டுமே மேக்ஸ்வெல் தன்னால் முடிந்த வரை ரன் குவிக்க முடியும். அதனால் அவர் ரன்னே எடுக்காமல், டெஸ்ட் மேட்ச் போல தடுப்பாட்டம் ஆடினார். இது கடினம் தான் என்றாலும் அந்த சூழலில் இதை தவிர வேறு வாய்ப்பு இல்லை. வேறு ஒரு அணியாக இருந்தால் இந்த நிலையில் பதற்றம் ஆகி போட்டியை கைவிட்டு இருக்கும்.

ஆனால், ஆஸ்திரேலியா நீண்ட அனுபவம் கொண்ட அணி மற்றும் இது போன்ற சூழ்நிலைகளில் அந்த அணி வெற்றி பெற்றும் இருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் இதை கையாண்டது. கம்மின்ஸ் திட்டத்தில் ஒரு பெரிய சிக்கலாக மேக்ஸ்வெல்லுக்கு காலில் வலி ஏற்பட்டது. ஆனால், அணிக்காக வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்த மேக்ஸ்வெல் வலியுடன் போராடி 201 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.

கம்மின்ஸ் இறுதி வரை அவுட் ஆகாமல் நின்று 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இது தான் போட்டியின் திருப்புமுனை என்றும் சொல்லலாம். ஒரு முனையில் மேக்ஸ்வெல், மறுமுனையில் கம்மின்ஸ் என இருவருமே ரன் குவிக்க முடிவு செய்து இருந்தால் ஒரு கட்டத்தில் விக்கெட் வீழ்ந்து இருக்கும். அதை தவிர்த்து கம்மின்ஸ் அபாரமாக செயல்பட்டார். ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

Story first published: Wednesday, November 8, 2023, 7:49 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+