Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN : குல்தீப் மட்டும் இதை செய்தால் இந்தியா காலி.. அவர் கையில் தான் மேட்ச்சே இருக்கு

புனே : இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சரியாக் செயல்படவில்லை என்றால் இந்திய அணிக்கு அது பெரிய ஆபத்தாக மாறும்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். இந்திய அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் களமிறங்கிய அவர் 30 ஓவர்கள் வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி ஓவருக்கு 3.9 மட்டுமே.

இதில் இருந்தே கடந்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் அவர் எத்தகைய பங்கை வகித்து இருக்கிறார் என தெரிந்து கொள்ளலாம். ஆனால், வங்கதேச போட்டியில் ஒரு சிக்கல் இருக்கிறது.

ICC ODI World Cup 2023 IND vs BAN - Kuldeep Yadav is the trump card for India

போட்டி நடைபெறும் புனே ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம். அங்கே பவுண்டரி எல்லைகளும் சிறியவை. அதனால் ஸ்பின்னர்கள் அங்கே எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி உள்ளது.

எனவே, குல்தீப் யாதவ் மற்ற மூன்று போட்டிகளை போல இந்தப் போட்டியிலும் குறைவாக ரன் கொடுத்து பந்து வீசினால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறும். அவர் விக்கெட் வீழ்த்துவது இரண்டாவது பிரச்சனை. ஆனால், ரன் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

அதே சமயம், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினால் நிச்சயம் இந்தியா இந்தப் போட்டியில் வெல்லும். காரணம், இந்த ஆடுகளத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் எளிதாக விக்கெட் வீழ்த்த முடியும் என் கூறப்படுகிறது. பும்ரா, சிராஜ், தாக்குர் ஆகியோருடன் குல்தீப் யாதவ்வும் விக்கெட் வேட்டையாடினால் வங்கதேசம் அணி நிச்சயம் அழுத்தத்துக்கு ஆளாகும்.

இந்திய அணியைப் போல வங்கதேசம், இந்தப் போட்டியில் நஜ்முல் ஹோசைன் சாண்டோவின் ஃபார்ம் மீள வேண்டும் என்ற கவலையில் இருக்கிறது. அவர் கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத நிலையில், வங்கதேசம் தோல்வி அடைந்து இருக்கிறது.

மேலும், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. அதுவும் அந்த அணிக்கு பின்னடைவாக மாறி உள்ளது.

Story first published: Thursday, October 19, 2023, 8:13 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+