For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை - பும்ராவுக்கு வந்த சோதனை.. 3 விக்கெட் எடுக்கணும்.. இல்லைனா முக்கிய வாய்ப்பு போச்சு

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது லீக் சுற்றில் ஆறு போட்டிகளில் ஆடி இருக்கும் பும்ரா 14 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

அவர் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் குறைந்தது 3 விக்கெட்கள் வீழ்த்த வேண்டும்.

ICC ODI World Cup 2023 IND vs SL Most Wickets : Jasprit Bumrah have to take 3 wickets

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இருக்கிறார். அவர் 6 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 7 போட்டிகளில் 16 விக்கெட்களும், தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சென் 16 விக்கெட்களும் வீழ்த்தி இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஜான்சென் மற்றும் ஷஹீன் ஷா 7 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளதால் அவர்களை விடுத்து பார்த்தால், ஜம்பா, பும்ராவுக்கு இணையாக 6 போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஆனால், பும்ராவை விட அவர் 2 விக்கெட்கள் அதிகம் வீழ்த்தி இருக்கிறார்.

எனவே, இந்தப் பட்டியலில் பும்ரா முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இலங்கை அணிக்கு எதிராக மூன்று விக்கெட்களுக்கும் மேல் எடுக்க வேண்டும். அதே சமயம், ஜம்பா தன் 7வது போட்டியில் குறைவான விக்கெட்கள் வீழ்த்தினால் மட்டுமே பும்ராவால் உலகக்கோப்பை தொடரின் முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.

இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து குல்தீப் யாதவ் 6 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தி 13 வது இடத்தில் இருக்கிறார். முகமது ஷமி 2 போட்டிகளில் மட்டும் ஆடி 9 விக்கெட்கள் வீழ்த்தி 16வது இடத்தில் இருக்கிறார். இந்த இருவரில் ஷமி நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிக்கும் 3 - 4 விக்கெட்கள் வீழ்த்தினால் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, November 2, 2023, 8:38 [IST]
Other articles published on Nov 2, 2023
English summary
ICC ODI World Cup 2023 IND vs SL Most Wickets : Jasprit Bumrah have to take 3 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+