Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ட்விஸ்ட்.. ஹர்திக் பாண்டியா இடத்துக்கு 2 வீரர்கள் இடையே கடும் போட்டி.. ரோஹித் கையில் முடிவு

புனே : இந்திய அணியில் எதிர்பார்க்காத மாற்றமாக ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் ஆடுவது கேள்விக் குறியாகி இருக்கிறது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்தியாவின் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பு மிக மிகக் குறைவு என கூறப்படுகிறது.

அதிரடி பேட்டிங் திறனும், வேகப் பந்துவீச்சாளருமான பாண்டியாவிற்கு மாற்று வீரர் என அணியில் யாரும் இல்லாத நிலையில், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் இடையே அவர் இடத்தை பிடிக்க போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஞாயிறு அன்று ஆட உள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

Mohammed Shami or Suryakumar Yadav to play instead of Hardik Pandya

பாண்டியாவுக்கு பெரிய அளவில் காயம் இல்லை என ரோஹித் சர்மா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடன் கூறினாலும், கணுக்காலில் காயம் ஏற்பட்டால் வேகப் பந்துவீச்சாளர்களால் உடனடியாக அதில் இருந்து மீண்டு விட முடியாது. குறிப்பாக ஓடி வந்து பந்தை வீசும் முன் காலை ஊன்றும் போது காயம் பெரிதாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தான் பாண்டியாவிற்கு மாற்றாக முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ், இருவரில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி பாண்டியா போல பேட்டிங் ஆட முடியாவிட்டாலும் பந்து வீச்சில் அவரை விட சிறப்பாகவே வீசுவார். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர் ஷமி. அவரது அனுபவம் மற்றும் பந்தை எந்த நேரத்திலும் ஸ்விங் செய்யும் திறன் அவரை அணியில் தேர்வு செய்ய தூண்டும் விஷயங்கள்.

மறுபுறம் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பாண்டியா போல பந்துவீசும் திறன் கொண்டவர் அல்ல. அவர் அணியில் இடம் பெற்றால் அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசவும் முடியாது. எனினும், பாண்டியா அளவிற்கு அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இவரது ஃபார்ம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. உலகக்கோப்பைக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சூர்யகுமார் இரண்டு அரைசதங்கள் அடித்து இருக்கிறார் என்பது அவருக்கு சாதகமான விஷயமாக உள்ளது.

அவர்கள் இருவரும் பாண்டியாவிற்கு நேரடி மாற்று வீரர்கள் இல்லை என்றாலும், ஒரு வகையில் அவர்கள் இருவரில் ஒருவரை வைத்தே கேப்டன் ரோஹித் சர்மா பாண்டியா இழப்பை ஈடுகட்ட வேண்டும். இதன் இறுதி முடிவு கேப்டன் ரோஹித் சர்மா கையில் தான் உள்ளது.

Story first published: Friday, October 20, 2023, 10:47 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+