For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை அதிக ரன்கள் - நம்பர் 1 இடத்தில் யார்? கோலி வைத்த ட்விஸ்ட்.. ரோஹித் சர்மா மெகா சாதனை

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி.

உலகக்கோப்பை லீக் சுற்றின் முடிவில் விராட் கோலி சரியாக 3 ரன்கள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

ICC ODI World Cup 2023 Most runs : Virat Kohli becomes number 1, Rohit Sharma new world record

மறுபுறம், ரோஹித் சர்மா அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தாலும், எந்த வீரரும் இது வரை செய்யாத உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. அவர் 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து 648 ரன்கள் குவித்து இருந்தார். தற்போது 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் இதுவரை நடந்த ஒன்பது லீக் சுற்றுப் போட்டிகளில் ஆடி 503 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார் ரோஹித்.

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 1996 உலகக்கோப்பை மற்றும் 2003 உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கும் மேல் எடுத்து இருந்தார். ஆனால், இடையே 1999 உலகக்கோப்பை தொடரில் அவரால் 500 ரன்களுக்கு மேல் ரன் குவிக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரரும் ரோஹித் சர்மா மட்டுமே.

2023 உலகக்கோப்பையில் லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் விராட் கோலி (594 ரன்கள்), க்விண்டன் டி காக் (591 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா (565 ரன்கள்), ரோஹித் சர்மா (503 ரன்கள்), டேவிட் வார்னர் (499 ரன்கள்).

விராட் கோலி, ரோஹித் சர்மா தவிர்த்து இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 421 ரன்கள் அடித்து எட்டாவது இடத்தில் இருக்கிறார். கே எல் ராகுல் 347 ரன்கள் அடித்து 18வது இடத்தில் இருக்கிறார். சுப்மன் கில் 270 ரன்கள் எடுத்து 34வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Monday, November 13, 2023, 11:16 [IST]
Other articles published on Nov 13, 2023
English summary
ICC ODI World Cup 2023 Most runs : Virat Kohli becomes number 1, Rohit Sharma new world record with consecutive 500 plus runs in two world cup editions.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+